Serial TRP: இந்த வாரம் நம்பர் 1 விஜய் தொடர் இதுதானாம்… சறுக்கிய சிறகடிக்க ஆசை.. டாப் 10 லிஸ்ட்

Published on: August 8, 2025
---Advertisement---

Serial TRP: சின்னத்திரை சீரியல்களின் தரவரிசை சொல்லும் டிஆர்பி லிஸ்ட் இந்த வாரத்திற்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் முறையாக இன்னொரு விஜய் சீரியல் டாப் 10 இடத்திற்குள் வந்துள்ளது.

இந்த வாரம் சின்னத்திரையில் டாப் முதல் சீரியலாக இருப்பது கயல். சைத்ரா ரெட்டி நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஓவர் நெகட்டிவிட்டி இருந்தாலும் ரசிகர்களின் ஆதரவு இருக்கிறது.

இரண்டாவது இடத்தில் சிங்கப்பெண்ணே சீரியல் சறுக்கி இருக்கிறது. ஆனந்தியின் கர்ப்பத்துக்கு இன்னும் யார் காரணம் என தெரியாத காரணத்தால் இதற்கு வரவேற்பு குறைந்து இருக்கிறது.

மூன்றாவது இடத்தில் மூன்று முடிச்சி சீரியல் வந்து இருக்கிறது. தொடர்ந்து ஒரே டிராக்கில் பயணம் செய்யும் இந்த சீரியல் இன்னும் டாப் 3க்குள் இருப்பதே ஆச்சரியமான விஷயம் தான். எப்போதும் போல டாப் 3 இடம் மாறவில்லை. ஆனால் மற்ற இடங்களில் பெரிய மாற்றம்.

நான்காம் இடத்தில் பல வாரங்களாக வலுவான இடத்தினை பிடித்து இருக்கிறது மருமகள் சீரியல். ஐந்தாம் இடம் ஆச்சரியமாக சிறகடிக்க ஆசையை நகர்த்தி விட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ்2 இடம் பிடித்து இருக்கிறது. அரசியின் கல்யாணம் டிராக் இதற்கு காரணமாகி இருக்கிறது.

இந்த முறை ஆறாவது இடத்துக்கு இரண்டு சீரியல் இடம் பெற்றுள்ளது. காதல் ரூட்டில் செல்லும் அன்னம், எதேர்ச்சையாக கலகலப்பாக செல்லும் அய்யனார் துணை சீரியல். ஏழாவது இடத்தில் அதிர்ச்சி எண்ட்ரியாக சிறகடிக்க ஆசை இருக்கிறது.

முதல் விஜய் டிவி சீரியல் என்ற அடையாளத்தினை இழந்து மூன்றாம் இடத்திற்கு சறுக்கி இருக்கிறது. மகாநதி சீரியல் எட்டாவது இடத்தில் இருக்கிறது. ஆனால் இதில் அடுத்த வாரம் மாற்றம் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பதாவது இடத்தில் சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலும், பத்தாவது இடத்தில் ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியலும் இடம்பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment