என்ன செல்லம் நீ சுகர் பேபியா!. திரிஷா இமேஜை டேமேஜ் செஞ்சிட்டாரே மணி சார்!…

Published on: August 8, 2025
---Advertisement---

Thug life Trisha: மிஸ் மெட்ராஸாக இருந்து சினிமாவில் நடிகையாக மாறியவர் திரிஷா. துவக்கத்தில் நடிக்க தடுமாறினார். நடிப்பு வரவில்லை. நடனம் வரவில்லை. எனவே, முகத்தில் எதைஎதையோ ரியாக்‌ஷன் என காட்டி ஒப்பேற்றினார். சாமி போன்ற ஹிட் படங்களில் நடித்ததால் இவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் சென்று சிரஞ்சீவிக்கெல்லாம் ஜோடியாக நடித்தார்.

தமிழில் அஜித், விஜய், சிம்பு, தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற எல்லா நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தார். ஒருகட்டத்தில் நயன்தாரா நம்பர் ஒன் நடிகையாக மாறிவிட்ட திரிஷாவின் மார்க்கெட் கீழே போனது. சில வருடங்கள் இவரை சினிமாவில் பார்க்கவே முடியவில்லை. இதற்கிடையில் நிறைய புதுப்புது நடிகைகளும் வந்துவிட்டார்கள்.

ஒருபக்கம் திரிஷா இதுவரை திருமணமும் செய்துகொள்ளவில்லை. இப்போது விவாகரத்து அதிகரித்துவிட்டது. திருமணம் செய்து விவகாரத்து செய்வதற்கு திருமணமே செய்யாமல் இருக்கலாம் என தத்துவம் சொன்னார். அப்படி அவர் இருந்தபோதுதான் மணிரத்னம் தான் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷாவுக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுத்தார்.

அந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே திரிஷாவின் மார்க்கெட் மீண்டும் மேலே போனது. அதோடு, ‘திரிஷா எவ்வளவு அழகாக இருக்கிறார்’ என ரசிகர்கள் ஜொள்ளுவிட்டார்கள். எனவே, தொடர்ந்து விஜயுடன் லியோ, அஜித்துடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்தார்.

அதோடு கமலும், மணிரத்னமும் இணைந்து வுருவாக்கிய தக் லைப் படத்திலும் நடித்தார். இந்த படம் நேற்று வெளியானது. முதலில் திரிஷாவின் கதாபாத்திரம் நன்றாகவே இல்லை. அவரை விபச்சார விடுதியிலிருந்து அழைத்து கமல் சின்ன வீடாக வைத்துக்கொள்கிறார். அவருக்கு பின் அவரின் வளர்ப்பு மகன் சிம்பு திரிஷா மீது ஆசைப்படுகிறார். அவரோடும் திரிஷா இருக்கிறார் என காட்டியிருக்கிறார்கள். இந்த படத்தில் திரிஷா ‘சுகர் பேபி’ என ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.

மேலும், இந்த படத்திற்கு திரிஷா தேவையே இல்லை. அவரின் காட்சிகள் படத்திற்கு எந்த விதத்திலும் உதவவில்லை எனவும் பலரும் சொல்லி வருகிறார்கள். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் அழகு தேவதையாக வந்து பலராலும் காதலிக்கப்பட்டவரை மணி சார் சுகர் பேபி ஆக்கி அவரின் இமேஜை டேமேஜ் செய்துவிட்டார் எனவும் கதறுகிறார்கள் திரிஷா வெறியர்கள்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment