Connect with us

Cinema News

சிம்ரன் மகனும் பட்டம் வாங்கிட்டாரே!.. இதென்ன பிரபலங்களின் வாரிசுகள் பட்டம் வாங்கும் வாரமா!..

நடிகை சிம்ரன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் சிம்ரனுக்கு பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. மேலும், தற்போது சூர்யாவின் மகள் தியா, தனுஷின் மகன் யாத்ரா என பல பிரபலங்களின் வாரிசுகளின் பட்டமளிப்பு விழாவின் வீடியோ வைரலாகி வரும் நிலையில் சிம்ரனின் மகனும் பட்டம் வாங்கிய வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

நடிகை சிம்ரன் ஒன்ஸ்மோர் மற்றும் வி.ஐ.பி ஆகிய படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். துள்ளாத மனமும் துள்ளும் , வாலி , பிரியமானவளே , கன்னத்தில் முத்தமிட்டால் , வாரணம் ஆயிரம் , பேட்ட உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். பரதநாட்டியம் மற்றும் சல்சா நடனத்தில் பயிற்சி பெற்று பஞ்சாபி, இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளிலும் சரளமாகப் பேசும் திறமைக் கொண்டவர்.

நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் தனது சிறுவயது நண்பரான தீபக் பாகாவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆதீப் மற்றும் ஆதித் என்ற இரு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு சில ஆண்டுகள் இடைவெளி எடுத்து, 2014-ல் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அந்தகன் மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில், இன்று சிம்ரனின் மகன் ஆதிப் பாகா பட்டம் பெற்ற விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். சிம்ரனின் மகனுக்கும் பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.நடிகை சிம்ரனின் மகன் பேராசிரியர் கரங்களால் பட்டம் பெற்ற நிலையில், அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதை பார்த்த ரசிகர்கள் இதுவல்லவோ வளர்ப்பு என சிம்ரனை பாராட்டி வருகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top