Connect with us

Cinema News

இனி தான் பிரச்னையே… கன்னட திரைப்படங்களின் குடுமி கோலிவுட் கையில்… என்ன நடக்க போகுதோ?

Thuglife: தமிழ் நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் தடை செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இனி இரண்டு மாநில திரையுலகில் இனி என்ன நடக்க போகுது என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாச, சிலம்பரசன், அபிராமி, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தக் லைஃப். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். படத்தின் புரோமோஷன்கள் கடந்த ஒரு மாதமாக நடந்தது.

இப்படி இருக்கையில் ஒரு மேடையில் கமல்ஹாசன் தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது எனப் பேசி இருப்பார். இது கர்நாடகாவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கன்னட அமைப்புகள் கமலுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.

கன்னட சினிமா வர்த்தக சங்கம் கமல்ஹாசன் தான் தெரிவித்தற்கு மன்னிப்பு கோரவில்லை என்றால் இங்கு தக் லைஃப் திரைப்படத்தினை வெளியிட முடியாது என உத்திரவிட்டது. மாற்றி மாற்றி இரண்டு முறை கெடு விதித்தும் கமல்ஹாசன் தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்றார்.

நீதிமன்றம் சொல்லிக்கூட தப்பாக புரிந்துக்கொண்டதற்கு நான் எப்படி மன்னிப்பு கேட்க முடியும் என்றே பேசி இருப்பார். இதனால் இன்று பிரம்மாண்டமாக வெளியான தக் லைஃப் கர்நாடகாவில் ரிலீஸ் செய்யப்படவில்லை.

இந்த விஷயம் இங்கு முடியாது. இனிதான் இதன் விஸ்வரூபமே இருக்கும் என பேச்சுகள் தொடங்கி இருக்கிறது. முதலில் கன்னட படங்கள் ட்ரோல் செய்யப்பட்டாலும் சில வருடங்களாகவே கன்னட படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது.

கர்நாடகாவில் தமிழ் படங்களின் மார்க்கெட் விலையை விட தமிழ்நாட்டில் கன்னட படங்களின் மார்க்கெட் தான் பெரியது. இந்த தடையால் கர்நாடகா தயாரிப்பாளருக்கே பாதிப்பு அதிகமாக இருக்கும். கேஜிஎஃப் திரைப்படத்தின் முதல் பாகம் தமிழ்நாட்டில் 8 கோடி வசூல் செய்தது.

இரண்டாம் பாகம் தமிழ்நாட்டிலே 200 கோடி அளவில் வசூல் செய்திருந்தது. காந்தாரா திரைப்படமும் 60 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது. இந்த படங்கள் எல்லாமே தற்போது அடுத்தடுத்த பாகங்களாக உருவாகி வருகிறது. இனிமேல் இவர்களால் தமிழ்நாட்டில் கல்லா கட்ட முடியுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் தற்போது விஜயின் கடைசி படமான ஜனநாயகனின் தயாரிப்பாளர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதால் இப்படத்திற்கும் சிக்கல் உருவாகி இருக்கிறது. கன்னட படங்கள் தமிழ் நாட்டில் கோடிக்கணக்கில் வசூல் செய்தாலும் தமிழ் படங்கள் லட்சத்தில் மட்டுமே கர்நாடகாவில் வசூல் செய்து வருகிறது.

கமலை எதிர்க்க போய் தற்போது கன்னட சினிமா சிக்கலில் சிக்கி இருக்கிறது. இதனால் இனி இரண்டு மொழி திரையுலகிலுமே நிறைய பாதிப்புகள் இருக்கும் என எண்ணப்படுகிறது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top