Thuglife: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படத்தின் முதல் காட்சியை தொடர்ந்து எக்ஸ் தளத்தில் விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் ராஜ்கமல் நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கும் திரைப்படம் தக் லைஃப். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்து இருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார்.
இன்று உலகமெங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. இதன் முதல் காட்சி முடிந்து இருக்கும் நிலையில் விமர்சனங்கள் அதிர்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
தக் லைஃப் படத்தில் பெரிய கதை இல்லை. எந்த புதிய விஷயமும் இல்லை. வெரி அவேரேஜ். கமல்ஹாசன் விண்வெளி நாயகன் இல்லை. சாகா நாயகன். அவரை எவ்வளோ சுட்டாலும் சாகவே மாட்டார். எல்லா விஷயமும் வேஸ்ட் ஆகிவிட்டது. ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் வேஸ்ட்.
மணி சார் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? இந்தியன்2 படத்தை விட வொர்ஸ்ட். கமல்ஹாசனுக்கு வயசாகிவிட்டது. இது அவரின் மோசமான பகுதி. சிலம்பரசனுக்கு முக்கியமே இல்லாத கேரக்டர். திரிஷாவுக்கு டம்மி ரோல். பேட் கேங்ஸ்டர் டிராமா. செம மொக்கை.
கமர்ஷியல் ரேட்டிங் 1/5 கன்டண்ட் ரேட்டிங் ⅖. பெரிய ஏமாற்றம். முழு படத்திலும் உட்கார முடியவில்லை. இரண்டாம் பகுதி சரியில்லாத பழி வாங்கும் கதையாக மாறுகிறது. சிலம்பரசன் இரண்டாம் பகுதியில் மொத்தமாக டம்மி. துணை பாத்திரம் எதுவும் சரியாக அமையவில்லை. மணிரத்னத்திடம் இதை எதிர்பார்க்கவில்லை.
மில்லியன் முறை சொன்ன கதை. முதல் பகுதி சரியாக அமைந்தாலும் இரண்டாம் பகுதி சறுக்க தொடங்கியது. விவேகம் மாதிரி ஆரம்பிச்சு இந்தியன் 2 மாதிரி போய் மரணப்பயத்தை காட்டிட்டு சிசிவி பக்கம் திரும்பி வந்து ஒரு வழியா முடிச்சி விட்டாரு போங்க. தொடர்ச்சியாக தக் லைஃப் படத்திற்கு இது போன்ற நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து கொண்டு வருகிறது.
