முதல் மரியாதை ராதாவை மறக்க முடியுமா?.. ’டிக் டிக் டிக்’ என அதற்கு அவருக்கு இத்தனை வயசாகிடுச்சா!..

Published on: August 8, 2025
---Advertisement---

80களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி போன்ற பல மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வெற்றிகரமாக நடித்து வந்த ராதா நேற்று தனது 61வது வயது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய வீடியோவை சற்றுமுன் பகிர்ந்துள்ளார்.

நடிகை ராதா 1981ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். டிக் டிக் டிக், முதல் மரியாதை, ஜப்பானில் கல்யாண ராமன், காதல் பரிசு, ராஜாதி ராஜா போன்ற பல ஹிட் படங்களில் தோன்றிய ராதா, சாந்தி என் சாந்தி படத்திற்குப் பிறகு திரைத்துறையை விட்டு விலகி விட்டார்.

பின்பு தொழிலதிபர் ராஜசேகரன் நாயரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர், துளசி நாயர் என்ற இரு மகள்களும் உள்ளனர். கார்த்திகா நாயர் ஜோஷ் மற்றும் கோ என இரண்டு படங்களில் நடித்தார். துளசி நாயர் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்து அறிமுகமானார். இருவரும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. மேலும் மூத்த மகள் கார்த்திகா நாயரை, ரோஹித் மேனன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன் நடன நிகழ்ச்சியின் 6 மற்றும் 7ஆவது சீசன்களில் நடுவராகப் தோன்றி கம்பேக் கொடுத்த ராதா, நேற்று தனது 61வது பிறந்தநாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment