மன்னிப்பு கேட்கமுடியாது.. படத்துலயும் ஆணித்தரமா சொல்லிக் காட்டிய கமல்.. வீடியோவ பாருங்க

Published on: August 8, 2025
---Advertisement---

செய்யாத தவறுக்கு மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என அவருடைய நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார் கமல். அவர் நடித்து நாளை வெளியாக இருக்கும் தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கன்னட மொழி குறித்து பேசியது பேசு பொருளாக மாறியது. அந்த விழாவில் அவர் பேசியது என்னவெனில் கன்னட உலகின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் தனக்கு அண்ணன் மாதிரியும் சிவராஜ் குமார் என்னுடைய தம்பி மாதிரியும் பழகி வருகிறோம்.

தமிழ் மொழியில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதனால் நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்றவாறு பேசி இருந்தார். எப்படி தமிழ் மொழியில் இருந்து பிறந்தது கன்னடம் என ஒட்டுமொத்த கன்னட அமைப்பினரும் கமலுக்கு எதிராக நிற்க ஆரம்பித்து விட்டனர். அதோடு தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிப்போம் என்று கோஷங்களையும் எழுப்பினர்.

இது குறித்து அங்கு உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்றது. நீதிபதி கமலிடம் ஒரு மன்னிப்பு கேட்டால் என்ன என்ற வாதத்தை முன் வைத்தார். அதற்கு கமல் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது .அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என்ற வகையில் இவருடைய தரப்பு வாதத்தை கூறினார். அதனால் இந்த வழக்கு ஜூன் 10ஆம் தேதி ஒத்திவைப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இதற்கிடையில் கர்நாடகா ஃபிலிம் சேம்பர் கமலுடன் அமைதியான பேச்சு வார்த்தை நடத்த ஆர்வம் தெரிவித்திருப்பதாக செய்தி வெளியானது .அதோடு தக்லைஃப் திரைப்படத்தையும் தங்கள் மாநிலத்தில் வெளியிட விருப்பத்தையும் தெரிவித்து இருந்தது. இதற்கிடையில் நாளை கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியாகும் என்ற ஒரு செய்தி தற்போது வெளியாகி வருகிறது .

இது ஒரு பக்கம் இருக்க இது சம்பந்தமான மீம்ஸ்களை நெட்டிசன்கள் இணையதளத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர். கமல் கௌதமி நடிப்பில் நம்மவர் படத்தில் இப்போது நடக்கிற பிரச்சனை குறித்து ஒரு காட்சியும் அதில் இடம்பெற்று இருக்கிறது .அதை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். நம்மவர் படத்தில் கமல் பேராசிரியராக நடித்திருப்பார். நடிகர் கரண் மாணவனாக நடித்திருப்பார்.

அதனால் கரணுக்கும் கமலுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படும் .ஒரு கட்டத்தில் கரணை அடித்து விடுவார் கமல். அதனால் கரணுக்கு ஆதரவாக மாணவர்கள் கரணிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுவார்கள். அதற்கு கமல் மன்னிப்பு கேட்பதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை என இப்போது எந்த மாதிரி பேசி வருகிறாரோ அதே மாதிரியான ஒரு மனநிலையில் தான் அந்தப் படத்திலும் வசனங்களை வைத்து பேசி இருப்பார் கமல் .அதை இப்போது வைரலாகி வருகின்றனர்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment