Connect with us

Cinema News

டிடியை தொடர்ந்து பிரியங்காவுக்கும் காலில் ஃபிராக்சர்.. ஐயோ பாவம்

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் பிரியங்கா. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக விஜய் தொலைக்காட்சியில் இவர் தொகுப்பாயினியாக இருந்து வருகிறார். இவருடைய ஹியூமர் மக்களை வெகுவாக கவர்ந்து இவருக்கு என தனி ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர்.

சமீபத்தில் தான் இவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றது. மிகவும் எளிமையாக நடந்த அந்த திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டு பிரியங்காவை வாழ்த்தினார்கள். அதனைத் தொடர்ந்து அவருடைய நண்பர்களான அமீர் பாவனி திருமணமும் நடைபெற்றது. அந்த திருமணத்திற்கு பிரியங்கா தன்னுடைய கணவருடன் வந்திருந்து திருமண விழாவை மிகவும் கோலாகலமாக மாற்றினார்.

இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா தனது இன்ஸ்டா வலைதளத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவருடைய காலில் ஏதோ அடிபட்டு இருக்கிறது. அதை காட்டியவாறு அந்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அவரது வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்களை பார்த்துவிட்டார்.

priyanka

priyanka

சொந்த வாழ்க்கையில் பிரச்சினை. நண்பர்களுடனான பிரச்சினை , உடல் ரீதியாக பிரச்சினை என பல போராட்டங்களை கடந்து வந்த பிரியங்காவுக்கு இப்போது புது பிரச்சினையாக காலில் அடிபட்டிருக்கிறது. அந்த புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் பிரியங்காவுக்கு என்னாச்சு என தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top