Connect with us

ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்த கெனிஷா.. ஒருவேளை இருக்குமோ?

latest news

ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்த கெனிஷா.. ஒருவேளை இருக்குமோ?

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்து பிரச்சனையின் மூலம் தான் கெனிஷா என்ற நபர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதுவரை அப்படி ஒரு பாடகி இருக்கிறாரா என்பது கூட யாருக்குமே தெரியாது. கென்யா நாட்டைச் சேர்ந்தவர் தான் கெனிஷா. பிரபல பாப் பாடகி. இவர் பல ஆல்பம் பாடல்களை கொடுத்திருக்கிறார். அப்படி ஒரு ஆல்பம் பாடலை ரிலீஸ் செய்யும் பொழுது தான் ஜெயம் ரவியின் அறிமுகம் அவருக்கு கிடைத்திருக்கிறது.

அடிப்படையில் ஜெயம் ரவியின் தீவிர ரசிகைதான் கெனிஷா. தன்னுடைய ஆல்பம் பாடலை ஜெயம் ரவி தான் திறந்து வைக்கிறார் என்று சொன்னதும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதிலிருந்து தான் அவர்களுடைய நட்பு ஆரம்பமானது. பாடகி மட்டுமல்லாமல் மனவள சிகிச்சையாளராகவும் இருந்து வருகிறார். தென்னிந்திய பிரபலங்கள் பாடகர்களுடன் தொழில் ரீதியாக தொடர்பில் இருந்து வருகிறார் கெனிஷா.

அந்த வகையில் தான் ரவி மோகனுடனான நட்பு பெரும் பேசுப் பொருளாக மாறியது. அவர் வந்த பிறகுதான் ஆர்த்திக்கும் ரவி மோகனுக்கும் இடையே பிரச்சனையே உருவானதாக ஆர்த்தி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் ஐசரி கணேஷ் மகள் திருமணத்தின் போது ரவி மோகனும் கெனிஷாவும் கைகோர்த்தபடி ஒன்றாக வந்தது பெரும் சர்ச்சையாக மாறியது.

அதிலிருந்து ஆர்த்தியும் ரவி மோகனும் மாறி மாறி அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர். இதில் கெனிஷா அவ்வப்போது தன்னுடைய ஸ்டோரி மூலமாகவும் ஸ்டேட்டஸ் மூலமாகவும் தான் யார் எந்த நிலைமையில் தான் இப்போது இருக்கிறேன் என்பதை ஸ்டோரி மூலம் வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது அவருடைய ஸ்டோரி ஒன்றில் அவர் வெளியிட்ட வாசகம் என்னவெனில் என்னுடைய பழைய வெர்ஷனை அழித்து விடுங்கள்.

keneesha

keneesha

அது காலாவதியாகிவிட்டது. உங்களுக்காக புதியதாக ஒன்றை நான் சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்றவாறு அதில் இருக்கிறது. இது அவருடைய தொழில் ரீதியான வாசகமாக கூட இருக்கலாம். அல்லது ஜெயம் ரவிக்கும் அவருக்கும் இடையே இருக்கும் நட்பை பற்றி கூட இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதனால் கூடிய சீக்கிரம் ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல வருகிறார் கெனிஷா என்பது மட்டும் இந்த ஸ்டோரி மூலம் நமக்கு தெரிய வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top