சிவாஜி பட இயக்குனர் சினிமாவில் நுழைந்த அதிசயம்… வாலியின் பேச்சையே மதிக்கலையே!

Published on: August 8, 2025
---Advertisement---

சினிமா உலகில் எப்படியாவது தேர்ந்து விட வேண்டும் என்று துடித்த பலரை இந்த சினிமா உலகம் நிராகரித்துள்ளது. அதே போல சினிமாவையே விரும்பாத பலரையும் இந்த சினிமா உலகம் கட்டி அணைத்துள்ளது. அதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம்.

திருச்சியில் சரிந்த சாம்ராஜ்யம் நாடகத்தைப் பார்க்க வாலி வந்து இருந்தார். அந்த நாடகத்தில் ஒல்லியாக நடித்த இளைஞரின் நடிப்பு வாலியை வெகுவாகக் கவர்ந்தது. சிறப்பாக வசனம் பேசிய அந்த நடிகரை மனம் திறந்து வாலி பாராட்டினார். அப்போது அந்த ஒல்லி நடிகர், வாலியிடம் உங்க நாடகத்துல ரொம்ப நாளா நடிக்கணும்னு ஆசை. வாய்ப்பு தருவீங்களான்னு கேட்டாராம். அதற்கு என் நாடகத்துல எப்போ வேணாலும் நடிக்கலாம். ஆனா உங்க தோற்றம், நடிப்பு எல்லாம் பார்க்கும்போது நீங்க சினிமாவுல சேர்ந்தா மிகப்பெரிய ஆளா வருவீங்கன்னு எனக்குத் தோணுதுன்னு வாலி சொன்னாராம்.

அந்த இளைஞர் ஒரு கம்யூனிஸ்ட். அப்போது பீடியைப் புகைத்துக் கொண்டு இருந்த அந்த நடிகர் அதைத் தூக்கி எறிந்து விட்டு சினிமாவில் எல்லாம் நான் சேரமாட்டேன். அது சாத்தானின் உலகம்னு சொன்னாராம். அப்படி பேசியவர் தான் ‘பாதை தெரிகிறது பார்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

அதன்பிறகு பல சிவாஜி படங்களை இயக்கினார். அவர் தான் இயக்குனர் கே.விஜயன். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் கே.விஜயன் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார். எம்ஜிஆர், சிவாஜி, கமல் நடித்த படங்களை இயக்கியுள்ளார். இவர் தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். அண்ணன் ஒரு கோயில், திரிசூலம், விடுதலை, ரத்தபாசம் ஆகிய சிவாஜி படங்களை இயக்கியுள்ளார்.

சிவாஜியின் படங்கள் அனைத்தும் சூப்பர்ஹிட். சினிமா ஆசையே இல்லாத ஒருவர் எப்படி இவ்ளோ சூப்பர்ஹிட் படங்களைத் தந்தார் என்றால் ஆச்சரியம்தான். அப்படி என்றால் சினிமா அவரை வாரி அணைத்துள்ளது அதிசயம்தானே..!

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment