புதுப்புது அவதாரங்கள் எடுக்கும் ரவி மோகன்!.. மனுஷன் ரொம்ப ரிஸ்க் எடுக்குறாரே!…

Published on: August 8, 2025
---Advertisement---

Ravi Mohan: கடந்த சில மாதங்களாகவே செய்திகளில் அதிகம் அடிபடுபவர் நடிகர் ரவி மோகன். பல வருடங்களாக சினிமாவில் நடித்து வந்தாலும் எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர். தான் உண்டு, நடிப்பு உண்டு, தன் குடும்பம் உண்டு என வாழ்ந்து வந்தவர். இவரைப்பற்றி ஒரு செய்தி வெளியானால் அது இவர் நடிக்கும் படம் தொடர்பான செய்தியாக மட்டுமே இருக்கும்.

ஆனால், அப்படிப்பட்டவர் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தபோது நிறைய பெண்களே அதிர்ந்து போனார்கள். அதுவும் மனைவி மீது பகீர் புகார்களை கூறி பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். ரவியின் புகார்களை ஆர்த்தியும், அவரின் மாமியார் சுஜாதாவும் மறுத்து அறிக்கை வெளியிட, பதிலுக்கு ரவியும் அறிக்கை வெளியிட சமூகவலைத்தளங்களே களேபரமானது.

அதோடு, விவாகரத்து வழக்கில் ரவி தனக்கு மாதம் 40 லட்சம் ஜீவனாம்சமாக கொடுக்க வேண்டும் என சொல்லி அதிர வைத்தார் ஆர்த்தி. இது சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதில், ரவி மோகன் கென்னிஷா என்கிற பெண்ணோடு தொடர்பில் இருக்கிறார் என்பது ரவியின் இமேஜை கொஞ்சம் பாதித்திருக்கிறது.

ஆனால், ரவி அதை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. தான் நடிக்கும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடித்து வந்த கராத்தே பாபு மற்றும் பராசக்தி ஆகிய படங்கள் அப்படியே நிற்கிறது. இந்நிலையில், ரவி தயாரிப்பாளராக மாறவிருக்கிறார். இந்த படத்தில் அவரும், எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

அதேபோல், ரவி இயக்குனராகவும் மாறவிருக்கிறார். ஜெயம் ரவியை வைத்து அவர் ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார். இதில், நடிக்க யோகி பாபுவும் சம்மதித்திருக்கிறார். இந்த படத்தை தயாரிக்குமாறு ஐசரி கணேஷிடம் கேட்டிருக்கிறாரம் ரவி. அவர் ஓகே சொல்லிவிட்டாலும் இது அடுத்தக்கட்டத்திற்கு இன்னும் நகரவில்லை.

23 வருடங்களாக நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ரவி திடீரென தயாரிப்பாளர், இயக்குனர் என புதுப்புது அவதாரங்களை எடுக்க துணிந்துவிட்டது திரையுலகில் பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment