Connect with us

Cinema News

உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்ல… இளையராஜாவுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து!

ராக தேவன் இசைஞானி இளையராஜாவின் 82வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஜூன் 3ம் தேதி பிறந்த இளையராஜா, கலைஞர் கருணாநிதி மீது கொண்ட பற்று காரணமாக அவருடைய பிறந்தநாளை ஒரு நாள் முன்பு கொண்டாடும் பழக்கத்தை கடைபிடிக்கத் தொடங்கி பல வருடங்களாக ஜூன் 2ம் தேதியே கொண்டாடி வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் 7,000-க்கும் மேற்பட்ட பாடல்களையும், 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ள இளையராஜாவின் இசை, உணர்வுகளை ஆழமாகத் தொட்டு பல தலைமுறைகளைக் கடந்து இன்றும் பிரபலமாக உள்ளன.

இளையராஜா ’அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவரது பின்னணி இசை திரைப்படங்களுக்கு உயிரூட்டும் வகையில் அமைந்துள்ளது. பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற இந்திய அரசின் விருதுகள், 5 முறை தேசிய விருது , பல மாநில அரசு விருதுகள் மற்றும் திரைப்படத் துறை விருதுகள் என பல விருதுகளை வென்று குவித்துள்ளார்.

கமல்ஹாசன் மற்றும் இளையராஜா இணைந்து பணியாற்ற தொடங்கிய முதல் படம் 16 வயதினிலே. அதை தொடர்ந்து சிகப்பு ரோஜாக்கள், குணா, தேவர் மகன், ஹே ராம், விருமாண்டி உள்ளிட்ட பல படங்களில் இணைந்து பல அழகான தமிழ் பாடல்களை தமிழ் சினிமா ரசிகர்களின் காதில் தேன் போல பாய வைத்துள்ளனர். 16 வயதினிலே படத்தில் தொடங்கிய நட்பு இன்றும் இவர்கள் இடையே தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலும், கமல், இளையராஜாவின் இசையை “திரையிசைச் சகாப்தம்” என்று ஒரு நிகழ்ச்சியின் போது புகழ்ந்துள்ளார்.

இந்நிலையில் 82வது பிறந்த நாளை கொண்டாடி வரும் இசைஞானி இளையராஜாவிற்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில், “உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்ல, அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என பதிவு ஒன்றை பதிவிட்டு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top