Connect with us

Cinema News

அஜித்தின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவா? சொன்னதை சாதிச்சுக் காட்டிய நடிப்பு அரக்கன்

குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற ஒரு கேள்வி சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஒரு வழியாக அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போகிறார் என ஓரளவு கன்ஃபார்ம் ஆகிவிட்டது. எச் வினோத், வெங்கட் பிரபு என ஒரு சில இயக்குனர்கள் லிஸ்டில் இருந்தாலும் குட்பேட்அக்லி படத்தின் மாபெரும் வெற்றி அஜித்தின் அடுத்த படத்தையும் அவர்தான் இயக்கப் போகிறார் என தெரிந்து விட்டது.

இதற்கிடையில் வாலி திரைப்படத்திற்கு பிறகு அஜித்துடன் எஸ் ஜே சூர்யா இணையவே இல்லை. குட்பேட் அக்லி படத்தின் போது கூட அஜித்துக்கு வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என்ற ஒரு பேச்சும் அடிபட்டது. ஏனெனில் இந்த படத்திற்கு முன்புதான் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக ஆதிக் இயக்கத்தில் நடித்திருந்தார். அதனால் எப்படியும் அஜித்துக்கு வில்லனாக ஆதிக் நடிக்க வைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அது நடக்கவே இல்லை. இந்த நிலையில் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன் .நியூ திரைப்படத்தின் மூலம் தான் எஸ் ஜே சூர்யா ஹீரோவாக நடித்த ஆரம்பித்தார். ஆனால் அந்த படத்தின் போது அஜித்தை தான் நியூ படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார். அதை அஜித்திடமும் போய் சொல்ல அதற்கு அஜித் ஏன் நீங்களே நடிக்கலாமே என்ற ஒரு வார்த்தையை போட அதிலிருந்து தான் நடிக்க ஆரம்பித்தார் எஸ் ஜே சூர்யா.

இப்போது அஜித்துடன் ஒரே ஸ்கிரீனில் நேருக்கு நேர் நிற்கும் பொழுது நீங்கள் சொன்னதை செஞ்சிட்டேன் பார்த்தீர்களா என்பதைப் போல எஸ் ஜே சூர்யாவின் ஆழ் மனசு சந்தோஷத்தில் இருக்கும் என கோடம்பாக்கத்தில் பேசி வருகிறார்கள்.விஜய்க்கு வில்லனாக கமலுக்கு வில்லனாக நடித்து மாஸ் காட்டிய எஸ்.ஜே. சூர்யா அடுத்து அஜித்துக்கு வில்லனாக எனும் போது இன்னும் அவருடைய மார்கெட் உயர வாய்ப்பிருக்கிறது.

sj

sj

ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து இப்போது வில்லனாக நடித்து உச்சத்தில் எஸ்.ஜே. சூர்யா இருக்கிறார் என்றால் இதுக்கும் அஜித்தின் அந்த வார்த்தைதான் காரணம். அதுமட்டுமில்லாமல் அஜித் என்றாலே எஸ்.ஜே. சூர்யாவுக்கு தனி ஸ்பெஷல்தான். என்னதான் நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top