சிம்பு படத்தை கமல் வேணானு சொன்ன காரணம்.. இப்படியொரு தியாகமா?

Published on: August 8, 2025
---Advertisement---

தக் லைப் திரைப்படத்திற்கான புரமோஷன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கமலை பொருத்தவரைக்கும் மற்ற நடிகர்களை விட இவர் தன் படங்களுக்கான ப்ரோமோஷனில் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்து படத்தை மக்கள் மத்தியில் நல்ல முறையில் கொண்டு சேர்க்கக்கூடிய நடிகர். உள்ளூர் போதாது என வெளிநாடுகளிலும் தனது படத்தை புரமோட் செய்து வருகிறார் கமல்.

கமல் மட்டுமல்ல ஒட்டு மொத்த படக் குழுவும் புரமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மணிரத்தினம் ,சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா ,கமல் என ஊர் ஊராக சென்று எந்த அளவு படத்தை மக்களிடையே கொண்டு போய் சேர்க்க வேண்டுமோ அப்படி சேர்த்து வருகின்றனர். இந்த சினிமா தன்னோடு நிற்காமல் அடுத்த தலைமுறையினருக்கும் பயன்பட வேண்டும். அதை அடுத்த தலைமுறையினரும் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் கமல்.

அதனால் என்னுடைய இடத்தில் ஒரு நான்கு நடிகர்களையாவது வைத்துவிட்டு தான் இந்த சினிமாவை விட்டு விலகுவேன் என ஒரு சமயம் கூறி இருக்கிறார். இப்படி எந்த ஒரு நடிகரும் கூற மாட்டார்கள். அந்த வகையில் சிம்புவை முதல் ஆளாக இணைத்திருக்கிறார் கமல் .அது தக் லைப் திரைப்படத்திலும் வெளிப்படையாகவே தெரிகிறது. அந்த படத்தில் அவர் சொல்லும் இனிமேல் இங்க நான் தான் ரங்கராய சக்திவேல் என்று சொல்வதில் இருந்து கமலுக்கு அடுத்தபடியான இடத்தை சிம்பு பிடிக்க இருக்கிறார் என்பதை மறைமுகமாக சொல்லி இருக்கிறார்.

இந்த நிலையில் தக்லைப் திரைப்படத்திற்கு முன்பே சிம்புவை வைத்து ராஜ்கமல் நிறுவனம் அவருடைய ஐம்பதாவது படத்தை தயாரிக்க இருந்தது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் தயாரிப்பு பணியில் இருந்து விலகிக் கொண்டது ராஜ்கமல் நிறுவனம். அதன் பிறகு தான் அந்த படத்தை சிம்புவே தயாரிப்பதாக ஒரு தகவல் வெளியானது. இதற்கிடையில் படத்தின் பட்ஜெட் பெரிய அளவில் இருப்பதினால் தான் கமல் அந்த படத்தை தயாரிப்பதிலிருந்து பின்வாங்கினார் என்ற ஒரு தகவல் வெளியானது.

thug life

thug life

ஆனால் உண்மையான காரணம் என்னவெனில் தக் லைஃப் திரைப்படத்திற்கு சிம்பு தேவைப்பட்டதால்தான் அந்த படத்தை வேண்டாம் என சொல்லிவிட்டு இந்த படத்தில் அவரை இணைத்துக் கொண்டோம். நாங்கள் வேண்டாம் என்று சொன்னது மிகப்பெரிய தியாகம் என ஒரு மேடையில் கூறினார் கமல். மற்றபடி இதில் வேறு எந்த காரணமும் கிடையாது என்றும் தெளிவு படுத்தினார் கமல்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment