Connect with us

Cinema News

ஆடியோ லாஞ்சுக்கு பிறகாவது தனுஷ் படத்துக்கு ஹைப் வருமா?.. இட்லி கடை பஞ்சாயத்து பத்தி வாய் திறப்பாரா?

கமல்ஹாசனின் தக் லைஃப் படத்துக்கு கடந்த சில மாதங்களாகவே கமல்ஹாசன் மற்றும் அவரது டீம் பல ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு பட்டித் தொட்டி எங்கும் தக் லைஃப் என ஒரு படம் வரப் போகிறது என்பதை தெரிவித்தது மட்டுமின்றி கன்னட மொழி பற்றி பேசி கர்நாடகாவில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பி தேசியளவில் வைரல் செய்தியாகவும் தனது படத்தை கமல்ஹாசன் படு ஜோராக வியாபாரம் பார்த்து வருகிறார்.

ஆனால், ஜூன் மாதம் 20ம் தேதி வெளியாகவுள்ள தனுஷின் குபேரா படம் தொடர்பாக இதுவரை பெரிதாக எந்தவொரு ஹைப்பும் எழவில்லை. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியான நிலையில், தான் தனுஷ் இந்த படத்தில் நல்லா நடிச்சிருக்காரே என்று ரசிகர்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.

நாளை குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய் ராம் கல்லூரியில் மாலை 7 மணியளவில் நடைபெற உள்ளது. ஆடியோ வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசிய பிறகு தான் படத்திற்கான ஹைப் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இட்லி கடை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாகி விட்டார் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், திட்டமிட்டபடி இட்லி கடை படம் வெளியாகுமா? அமலாக்கத்துறை சோதனையில் தனுஷ் சிக்கினாரா? இல்லையா? தேவையில்லாமல் மற்ற பிரபலங்களின் விவாகரத்து சர்ச்சையில் தனுஷ் பெயர் சிக்குவது உள்ளிட்ட பல சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுப்பாரா என எதிர்பார்க்கப்படுகிறது.

நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனாவை பார்க்கவே ஏகப்பட்ட ரசிகர்கள் குபேரா படத்தின் ஆடியோ லாஞ்சுக்கு செல்வார்கள் என தெரிகிறது. வரும் ஜூன் 20ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள குபேரா படம் பான் இந்தியா படமாக வெளியாகிறது.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top