Connect with us

Cinema News

ஹய்யோ.. கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்திய தனுஷ் – ஐஸ்வர்யா.. வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் தனுஷ். சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் இவருடைய முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 2022ல் நாங்கள் இருவரும் பிரிய போவதாக அறிவித்தனர். அதனால் பரஸ்பர விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

yathra

yathra

இதற்கிடையில் கடந்த வருடம் ஒருமித்த கருத்து அடிப்படையில் இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. 2004 இல் தனுஷும் ஐஸ்வர்யாவும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தனது மூத்த மகனின் பட்டமளிப்பு விழாவில் தனுஷும் ஐஸ்வர்யாவும் கலந்து கொண்டனர். தனது மகன் பட்டம் வாங்கியதை மிகவும் மகிழ்ச்சியாக தனுஷ் தன்னுடைய வலைதள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

yathra

yathra

அத்துடன் தனது மகனை தனுஷும் ஐஸ்வர்யாவும் இணைந்து கட்டிப்பிடித்து முத்த மழையை பொழிந்து இருக்கின்றனர். அந்த புகைப்படம் தான் இப்பொழுது வைரலாகி வருகின்றது. இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்தாலும் மகன்கள் என வரும்போது ஒரு அம்மாவாகவும் ஒரு அப்பாவாகவும் தங்களுடைய கடமைகளை தனுஷும் ஐஸ்வர்யாவும் இதுவரை செய்து வருகின்றனர்.

என்னதான் பிரச்சனை இருந்தாலும் மகன்கள் என்று வரும் பொழுது தம்பதி சகிதமாக இருவரும் வந்து மகன்களுக்காக செய்ய வேண்டிய கடமையை சரியாக செய்து விட்டு செல்கின்றனர். அந்த வகையில் இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது அனைவருக்கும் வியப்பையும் அதையும் தாண்டி ஒருவித மகிழ்ச்சியையும் தருகின்றது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top