LCUல் இந்த முறை ஹீரோ இல்ல சூப்பர்ஹிட் நாயகி… செம சம்பவமா இருக்கும் போலயே!

Published on: August 8, 2025
---Advertisement---

LCU: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ். ஆனால் இந்த முறை ஹீரோ இல்லாமல் ஒரு ஹீரோயின் முன்னணி நாயகியாக நடிக்க ஒரு படம் உருவாக இருக்கிறதாம்.

ஹாலிவுட் படங்களில்தான் ஒரு படத்துடன் இன்னொரு படம் இணைக்கப்பட்டு உருவாக்கப்படும். அப்படி ஒரு சீரிஸாக வெளிவந்த அவெஞ்சர்ஸ். பல மொழி ரசிகர்களுக்கும் விருப்பமான படமாக அமைந்துள்ளது. அந்த வழியில் தமிழில் முதல் ஆச்சரியமாக அமைந்தது எல்சியூ.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான எல்லா படங்களுமே ஒன்றோடு ஒன்று சில இடங்களில் சந்திக்கும். கைதி படம் வெளிவந்த பின்னர் விக்ரம் படத்தினை லோகேஷ் இயக்கி இருந்தார். அப்போது படம் ரிலீஸுக்கு முன்னர் கைதியை பார்த்துவிட்டு வாருங்கள் என ட்வீட் போட்டு ஆச்சரியப்படுத்தினார் லோகேஷ்.

அது ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் விஜயை வைத்து லியோவை இயக்கும் போதே இதுவும் எல்சியூவாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். சில காட்சிகளை அவர்களே இப்படி இருக்கலாம் என எல்சியூ பாணியில் பேசி வந்தனர்.

அதற்காகவே எல்சியூவாக லியோவை எடுத்து இருந்தார். இதை தொடர்ந்து எல்சியூவை ஒரு பெரிய தொடராக மாற்ற முடிவெடுத்திருக்கும் லோகேஷ் கனகராஜ். தொடர்ச்சியாக அதில் படங்களை இயக்கியும், தயாரித்தும் வருகிறார்.

தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் தயாரித்து வரும் திரைப்படம் பென்ஸ். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். தற்போது முன்னணி கேரக்டர்கள் குறித்து ஒரு ஷார்ட் பிலிம் கூட தயாராகி இருப்பதாகவும் லோகேஷ் தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் இதுவரை எல்சியூவில் கார்த்தி, கமல், விஜய் என ஹீரோக்களே முன்னணி கேரக்டராக இருக்கும் நிலையில் முதல்முறையாக ஒரு முன்னணி ஹீரோயினை வைத்து கதையின் நாயகியாக ஒரு படம் உருவாக இருக்கிறதாம். இப்படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்பு இருக்காது. அவர் தயாரிக்க மட்டுமே வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. சமந்தா தமிழில் நடித்து பல ஆண்டுகள் கழித்து இந்த படத்தில் நடிக்க இருப்பதால் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment