Connect with us

Cinema News

750 ஊசி போட்ட பொன்னம்பலம்… ஒரு காலத்துல எப்படி இருந்த வில்லன்? இப்படி ஒரு நிலைமையா?

ஒரு காலத்தில் படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்தவர் பொன்னம்பலம். முத்து படத்துல எல்லாம் மிரட்டுவாரு. இவர் சமீபகாலமாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். கிட்னி பெய்லியர்னு சொன்னாங்க. அப்புறம் என்னாச்சு? சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் வலி நிறைந்த வார்த்தைகளே அதிகம். வாங்க என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்.

எல்லாம் இயற்கை. கர்மான்னு சொல்வாங்க. நடக்குறது நடக்கும். பொறந்த உடனே எதையுமே எதிர்பார்க்கல. வளர்ந்த விதம் வேற. படிச்ச விதம் வேற. வேலை செஞ்ச விதம் வேற. அதுக்கு அப்புறம் மாற்றங்களாகி வருது. சந்தோஷமா இருந்த காலங்கள்ல சந்தோஷமாகத் தான் இருந்தேன்.

அமிதாப்பச்சன்கூட என்னை மாதிரி அனுபவிச்சிருக்க மாட்டாரு. காரணம் என்னன்னா அவரு ஒரு கூடு மாதிரி. நான் வந்து ஃப்ரீ பேர்டு. அந்த வகையில பார்த்தா 3 தலைமுறைக்கு என்னென்ன அனுபவிப்பாங்களோ அதை நான் இப்பவே அனுபவிச்சிட்டேன். எனக்கு கடமைகள் இருக்கு. நான் இப்படி ஆவேன்னு எனக்கே தெரியாது. வந்தபிறகு மக்கள் சப்போர்ட். எனக்கு தொழில் சுத்தம்.

எங்க அப்பா எங்கிட்ட சொன்னது என்னன்னா பொய் சொல்லாதே. திருடாதே. நீ எங்கே வேணாலும் போகலாம். கக்கூஸ் கூட கழுவலாம். ஆனா கெட்ட சகவாசம் வச்சிக்காதே. அடுத்த ஸ்டெப் எனக்குக் கேட்டதெல்லாம் கிடைக்கும். சினிமாவுல நல்ல மரியாதை. நல்ல சாப்பாடு. நல்ல ஆரோக்கியமான உடம்பு. நல்ல உறக்கம். பேரும் புகழும்.

இந்த அஞ்சும் கிடைச்சாலே மிகப்பெரிய விஷயம். அதுவும் குறுகிய காலத்துல கிடைச்சது. ரெண்டு பேரு இருக்கு. பொன்னம்பலம். கபாலி. நான் இறந்தா கூட என் பேரை சொல்ற அளவுல இருக்கு. இந்த உலகத்துலயே மிகக் கொடுமையான தண்டனை. எதிராளிக்குக் கூட வரக்கூடாதுன்னா அது டயக்னோசிஸ் பண்றதுதான். ஒரு நாள் விட்டு ஒரு நாள் 2 இன்ஜக்ஷன்.

பிளட் எல்லாம் எடுத்துடுவாங்க. 750 வாட்டி நானே ஊசி குத்திருக்கேன். அதுவும் ஒரே இடத்துல. கிட்டத்தட்ட 4 வருஷமா பண்ணிக்கிட்டு இருக்கேன். உப்புஇ கீரை வடைஇ தக்காளிஇ உருளைக்கிழங்குன்னு சாப்பிடக்கூடாதுன்னு சொல்வாங்க. நல்லா சாப்பிட்டுப் பழகுனவன் கிட்னி பெய்லியர் ஆனா செத்துப்போயிடலாம். இப்போ கிட்னி நல்லா ஆகிடுச்சு.

எல்லாம் சாப்பிடலாம். அந்த ஸ்டேஜ்லதான் இருக்கேன். ஆனா ஒரு அளவு தான் சாப்பிடணும். சாவு வரும் முன் ஆஸ்பிட்டலுக்குப் போகக்கூடாது. சூசைடு பண்ணிக்கலாம். ஆண்டவன் ரெண்டும் படைச்சிருக்கான். நல்லது. கெட்டது. எதுவுமே அளவோடு இருந்தா நல்லது. நான் டிரிங்ஸ் நிறைய அடிப்பேன். யோகா பண்றதால போதை ஏறாது. நான் தண்ணி அடிச்சிட்டு வந்தேன்னு எங்கேயுமே தெரியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top