Connect with us

latest news

Singappenne: சுயம்பு ஒரு கொம்பேறி மூக்கன்… கல்யாணத்தை நடத்த விடுவானா? கோகிலாவையேக் கடத்திட்டானே…!

சிங்கப்பெண்ணே தொடர் சன்டிவியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோடில் நடந்த கதைச்சுருக்கத்தைப் பார்க்கலாமா…

மாமா என்ன காரியம் பண்றீங்க மாமா… கையைக் கீழே இறக்குங்க மாமா… இவ்ளோ பேசுனதுக்குப் பிறகு எங்களுக்கு மானம், ரோஷம் என்ன மாமா? என்னை மருமகன்னு வேற சொல்லிட்டீங்க. வேலு என்ன ஆனாலும் சரி. கோகிலா அக்கா கல்யாணத்தை நல்லபடியா முடிச்சிட்டுத்தான் நாம போறோம்னு வாணி சொல்கிறாள்.

மீண்டும் கல்யாணம் வீடு களைகட்ட ஆரம்பித்து விட்டது. மித்ராவிடம் அவளது அத்தை என்ன நம்ம பிளான் நடக்குதான்னு கேட்கிறாள். நாம நினைச்சதைத் தவிர மத்த எல்லாம் நடக்குது. யாருமே அவங்க காதலை ஆனந்தியோட அப்பா, அம்மாவிடம் போய் சொல்ல மாட்டார்கள்.

யாராவது அதைப் பற்றி சொல்றதுக்குள்ள ஏதாவது ஒரு பிரச்சனை வந்துக்கிட்டே இருக்கு. மகேஷ் இங்க இருக்கக்கூடாது. அதுக்கு ஏதாவது வழி பண்ணுங்கன்னு மித்ரா சொல்கிறாள். மகேஷ் இங்கே இருந்தா சுயம்புவால அடிதடி பிரச்சனை வரும்னு அங்கிள்கிட்ட சொல்லுங்கன்னு சொல்கிறாள். சரி. நான் சொல்றேன்னு மகேஷின் அம்மா சொல்கிறாள்.

ஆனந்தியும் அப்பாவும் நெகிழ்ச்சியான தருணங்களைப் பற்றி அசைபோடுகிறார்கள். கடைசியில் சுயம்புலிங்கம் பற்றி உள்ளுக்குள்ள நெருடல் இருந்துக்கிட்டே இருக்குன்னு சொல்கிறான் அழகப்பன். அவன் கொம்பேறி மூக்கன் பாம்பு. அவனை மகேஷ் அடிச்சி உதைச்சிட்டான். அவன் சும்மா இருக்க மாட்டான். அவன் நம்மளை அழிக்கணும்னு வெறி பிடிச்சி அலைஞ்சிக்கிட்டு இருப்பான். அவன் மூலமாவோ வேற யாரு மூலமாவோ இந்தக் கல்யாணம் தடைபட்டுறக் கூடாதுன்னு சொல்கிறான் அழகப்பன். அப்போது மகேஷ் தனது அம்மாவுக்கு மூச்சுத்திணறல்னு சொல்கிறான்.

நான் உடனே கிளம்பணும்னு சொல்ல அழகப்பனும் அதற்கு சம்மதிக்கிறான். அன்பு நீங்க இப்போ டென்ஷனா இருப்பீங்க. நான் வேணா டிரைவ் பண்றேன்னு சொல்கிறான். கடைசியில் அன்பு விடிஞ்சா கல்யாணம். நீ இங்கே இருந்தா தான் சரியா இருக்கும். யாரால என்ன பிரச்சனை வரும்னு தெரியல. அதனால நீ இங்கே இருந்தா தான் ஆனந்திக்கு சப்போர்ட்டா இருக்கும். அது மட்டுமல்ல.

சென்னை வரும்போது ஆனந்தியும், நீயும் ஜோடியாகத் தான் வரணும்னு மகேஷ் சொல்கிறான். அப்போது ஆனந்தி மகேஷை சார்னு அழைக்கிறாள். நேரமாகுது. பார்த்து கவனமா போங்க. போய் அம்மாவைப் பார்த்து எப்படி இருக்காங்கன்னு போன் பண்ணுங்கன்னு சொல்கிறாள் ஆனந்தி. பொண்ணு, மாப்பிள்ளைக்கு வாங்கிய கிஃப்ட்டை ஆனந்தியிடம் கொடுக்கிறான்.

கடைசியில் அன்புவைக் கட்டிப்பிடித்து துளசி உன்னோட பிளான் என்னன்னு சொல்லிட்டா. ஆல் தி பெஸ்ட் என்கிறான் மகேஷ் கார் கிளம்புகிறது. ஆனந்தி அன்புவைப் பார்த்தபடி வீட்டுக்குள் செல்கிறாள். இரவுப்பொழுது மண்டபம் பின்பக்கம் தனியாக வரவும். உன்னிடம் பேச வேண்டும். சரவணன்னு ஒரு மெசேஜ் கோகிலாவுக்கு வருகிறது. இந்த நேரத்துல எதுக்கு மெசேஜ் அனுப்பிருக்காருன்னு யாருக்கும் தெரியாமப் போகிறாள் கோகிலா.

அங்கு சுயம்பு கோகிலாவின் வாயைப் பொத்தி தூக்கி விடுகிறான். அவனுக்கு துணையாக சேகர் வந்துள்ளான். அவன்தான் சரவணனின் மொபைலில் இருந்து கோகிலாவுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளான். அந்த நேரம் அன்பு வந்து யாரோ வந்துட்டுப் போன மாதிரி இருக்கேன்னு பார்க்கிறான். ஆனந்தியோ அருகில் படுத்து இருந்த அக்காவைக் காணாமல் திடுக்கிடுகிறாள். அடுத்து நடப்பது என்ன என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top