latest news
கமலின் ராஜபார்வை படத்துக்காக 2 வருஷமா கஷ்டப்பட்டேன்… பிரபல கலை இயக்குனர் தகவல்
Published on
60 ஆண்டுகளுக்கு மேலாக கலை உலகிற்கு சிறப்பு சேர்த்துக் கொண்டு இருப்பவர் தோட்டாதரணி. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் இவர் இணைந்து பணியாற்றாத முக்கியமான இயக்குனர்களே இல்லை எனலாம். 2 முறை தேசிய விருது, பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.
மாநில அளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளார். கலை இயக்குனராக தான் பெற்ற அனுபவங்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம். சிங்கீதம் சீனிவாசராவுக்கு என் மேல கோபம். அப்பா போக முடியல. என் தம்பியும் போக முடியல.
சரி டைரக்டர் கூப்பிட்டா போக வேண்டியதுதானேன்னு நானா போனேன். முதல்ல வேணாம்னு சொன்னாரு. ரொம்ப கோபம் வந்தது. என்னை நீ பெயிண்டிங்னு மறுத்தார் சிங்கீதம் சீனிவாசராவ். அப்புறம் கமலே வரச்சொன்னாரு. வான்னுசொல்லி ஒர்க் பண்ண வச்சாரு. என்னை ஏன் கூப்பிடுறாருன்னு சொன்னதுக்கு அப்புறம் இது இன்ட்ரஸ்டிங் சப்ஜெக்ட். நீ தான் இருக்கணும்னு சொன்னாரு.
ராஜபார்வை தான் அந்தப் படம். எனக்கு 2வது படம். அதுல ஹீரோயின் ஆர்டிஸ்ட். டச்சப் பண்ணனும். அந்தி மழை பொழிகிறது பாட்டுக்கு 10 டிராயிங் பண்ணினேன். குடை பிடிச்சிக்கிட்டு கமல் பண்ணுவாரு. அதற்கு கேமராவை சுஹாசினி ஹேண்டில் பண்ணினாங்க. அந்தப் படத்துல நிறைய கஷ்டம் வந்தது. ஒவ்வொரு இன்டீரியர் டெக்கரேஷனுக்கும் கஷ்டம்தான். 2 வருஷமா எடுத்தாங்க.
கமலும், சிங்கீதமும் கொடுத்த உற்சாகம் தான் என்னைப் படம் பண்ண வைத்தது. அந்தப் பொண்ணோட வீட்டுல அவ்ளோ டெக்கரேஷன் பண்ணி இருந்தேன். இயக்குனர் ஐவி.சசியே அந்த வீடை நான் பார்த்தேனே. அது அப்படி இல்லையேன்னு சொல்லி ஆச்சரியப்பட்டார். அப்படின்னா டெக்கரேஷன் சக்சஸ் ஆகிருக்கு என்கிறார் கலை இயக்குனர் தோட்டாதரணி.
1981ல் கமலின் 100வது படமாக வெளியானது ராஜபார்வை. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கமலுடன் மாதவி ஜோடியாக நடித்துள்ளார். கமலின் சொந்தப் படம் இது. இளையராஜாவின் இசையில் அந்திமழை பொழிகிறது என்ற இனிமையான பாடல் இந்தப் படத்தில் தான் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தின் கலை இயக்குனர் தான் தோட்டாதரணி. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
வடிவேலு ஒரு முட்டாள் : சமீபத்தில் வடிவேலு ஒரு 10 youtube-பர்கள் சேர்ந்து சினிமாவை அழித்துக் கொண்டு வருகிறார்கள். அவர்களை தூங்க...
TVK Vijay: தவெக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை கரூர் சென்றிருந்த போது அவரை காண பல்லாயிரம் மக்கள் கூடியதில் கூட்ட...
நான் கைக்கூலி அல்ல தினக்கூலி : kpyபாலா இன்டர்நேஷனல் கைக்கூலி அவர் தமிழ்நாட்டுக்கு பேராபத்து என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி பாலா...
TVK Vijay: கரூர் தவெக கட்சி கூட்டத்தின் போது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து இருக்கும்...
TVK Vijay: தவெக கட்சியின் மாவட்ட பயணத்தில் கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த சந்திப்பில் 41க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில்...