விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுவே அவரது கடைசி படம் எனவும் அறிவித்துள்ளார். இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. விஜய் இதைத் தொடர்ந்து முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபட உள்ளார்.
அதற்காக இப்போதே அரசியல் பிரச்சாரங்கள் மற்றும் சுற்றுப்பயணத்திற்கான திட்டங்களையும், வியூகங்களையும் வகுத்து வருகிறார். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனல் ஒன்றில் ரசிகர் ஒருவர் விஜயின் அரசியல் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர் சொல்லும் பதில் என்னன்னு பார்க்கலாமா..
அரசியலில் வெற்றியும் வரும். தோல்வியும் வரும் என்று விஜய்க்கும் தெரியும்தானே. அப்படி இருக்க விஜய் ஏன் ஜனநாயகன் தான் கடைசி படம் என்று சொல்ல வேண்டும்? இதுக்கு அப்புறம் அவர் நடிக்க வந்தா நல்லாவா இருக்கும்? அதுக்கு அவரு அப்படி சொல்லாமலே இருந்து இருக்கலாமே… என ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் என்ன பதில் சொல்கிறார் என பார்ப்போமா…
இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை. முழுக்க முழுக்க அரசியல்தான் என விஜய் சொன்னபோதே அவரது அரசியல் பற்றி பல விமர்சனங்கள் எழுகின்றன. அப்படி இருக்கும்போது ஒரு பக்கம் சினிமாவில் நடித்துக் கொண்டும், இன்னொரு பக்கம் அரசியலிலும் ஈடுபடுவேன் என விஜய் சொல்லி இருந்தால் எப்படிப்பட்ட விமர்சனம் எழும்? அதைத் தவிர்ப்பதற்காகத் தான் அப்படிப்பட்ட முடிவை அறிவித்தார் விஜய் என்கிறார் சித்ரா லட்சுமணன்.
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை அறிவித்து அதற்கு கொள்கையையும், கோட்பாடுகளையும் வகுத்து, கொடியையும் அறிமுகப்படுத்தி மாநாட்டையும் நடத்தி என அனைத்துக் கட்சியினரும் வியக்கும் வகையில் அதிரடி காட்டியுள்ளார் விஜய்.
ஆனாலும் விஜய் மீது இன்னும் ஒரு குறை உள்ளது. அவரது அரசியல் நிலைப்பாட்டில் யாருடன் கூட்டணி? இன்னும் ஏன் ஒரு பிரஸ்மீட் கூட கொடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஆனால் அவருக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் ஜாஸ்திதான். இருந்தாலும் ரசிகர் கூட்டம் எல்லாம் வாக்குகள் ஆகாது என்றும் பலர் குறைசொல்கின்றனர். எது எப்படியோ வரும் 2026 தேர்தலில் அவர் சாதிப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.
