கிங் காங்.. வெரி சாரி.. சீக்கிரம் வந்து பாக்குறேன்!.. வீடியோ போட்ட மன்சூர் அலிகான்!…

Published on: August 8, 2025
---Advertisement---

Kingkong wedding: கேப்டன் பிரபாகரன் படத்தில் அசத்தலான வில்லனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் மன்சூர் அலிகான். முதல் படத்திலேயே இவரை ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. அதன்பின் பல படங்களிலும் வில்லனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பொதுவாக வில்லன் என்றாலே டெரராக காட்டுவார்கள்.

ஆனால், மன்சூர் அலிகான் துவக்கம் முதல் காமெடி கலந்த வில்லனாக நடிக்க துவங்கினார். எனவே, இவரை திரையில் ரசித்தார்கள். வில்லனாக நடிப்பதற்கு முன்பு கூட்டத்தில் ஒருவராக நடனமாடிக்கொண்டிருந்தார். இவர் ஒரு நடன நடிகர் என்பது பலருக்கும் தெரியாது. எதிலும் அடாவடியாக செயல்படுவார். மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே பேசிவிடுவார்.

இதனால் பல முறை இவர் சர்ச்சையிலும் சிக்கியதுண்டு. திரிஷா பற்றியது இவர் பேசியது சர்ச்சையாகி மன்னிப்பு கேட்கும் அளவுக்கு போனது. கடந்த சில வருடங்களாகவே காமெடி கலந்த வில்லன் வேடங்களில் அசத்தி வருகிறார். அவ்வப்போது சொந்த பணத்தை போட்டு சொந்த படமெடுத்து அதில் ஹீரோவாக நடிப்பார். சில மாதங்களுக்கு முன்பு கூட சரக்கு என்கிற படம் வெளியானது.

இந்நிலையில்தான் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார் மன்சூர் அலிகான். காமெடி நடிகர் கிங்காங்கின் மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அதற்காக திரைப்பிரபலங்கள் பலருக்கும் கிங் காங் நேரில் சென்று பத்திரிக்கை வைத்தார். அதில் மன்சூர் அலிகானும் ஒருவர். ஆனால், திருமணத்திற்கு மன்சூர் அலிகான் செல்லவில்லை.

இந்நிலையில் வீடியோ வெளியிட்ட மன்சூர் அலிகான் ‘கிங் காங். வெரி சாரி.. என்னால் திருமணத்திற்கு வரமுடியவில்லை. மதுரையில் ஒரு ஷூட்டிங்கில் மாட்டிக்கிட்டேன். அது சின்ன நிறுவனம். அதனால் வரமுடியவில்லை. சென்னை வந்ததும் கண்டிப்பாக வீட்டிற்கு வந்து மகளையும், மறுமகனையும் பார்க்கிறேன். பிரியாணி எடுத்து வை’ என அதில் பேசியிருக்கிறார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment