latest news
லஞ்ச் டைம்ல கதை சொல்ல வந்த பி.வாசு… கிழித்துத் தொங்க விட்ட சிவாஜி..!
Published on
சரித்திரம் என்ற ஒரு படத்திற்கான கதையைச் சொல்ல இயக்குனர் பி.வாசு சிவாஜி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நடந்த சம்பவம் என்னன்னு அவரே சொல்கிறார் பாருங்க.
அப்போது வாசுவின் நண்பரும் சக இயக்குனருமான பாரதி உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்குச் சென்று இருந்தாராம். அதனால் அவர் வர முடியவில்லை. சிவாஜி சார் லஞ்ச் பிரேக்ல வான்னு சொன்னாராம். ‘என்னடா சாப்பிட்டியா?ன்னு கேட்டாராம். இல்லன்னு பி.வாசு சொல்ல, ‘ஏன் சாப்பிடல?’ன்னு கேட்டுள்ளார் சிவாஜி.
‘நீங்க சொன்ன டைம் இதுதானே’ன்னு சொல்லி இருக்கிறார் வாசு. ‘நீ சாப்பிடாம, நான் எப்படி சாப்பிடுவேன்?’னு கேட்டுள்ளார். ‘நீ சாப்பிடாம நான் சாப்பிட்டா நல்லாருக்காதே. என்ன பண்ணலாம்?’னு திரும்பவும் கேட்க, ‘நீங்க சாப்பிடுங்க. நான் உட்கார்ந்துருக்கேன்’னு பி.வாசு சொன்னாராம். அதன்பிறகு நடந்தது என்ன என்பதை வாசுவே இப்படி சொல்கிறார்.
எனக்கு மட்டும் தான் சமையல் பண்ணிருக்காங்கன்னு ரொம்ப ஜோவியலா சொன்னாரு. அப்புறம் சரி. உனக்காக நான் சீக்கிரம் சாப்பிடுறேன்னாரு. சாப்பிட்டுட்டு டிவி போட்டுட்டாரு. அதுல கிரிக்கெட் மேட்ச் ஓடுது. நான் கதை சொல்ல ஆரம்பிச்ச உடனே நிறுத்திட்டாரு. ‘என்ன/’ன்னு கேட்டாரு. ‘அதை ஆஃப் பண்ணிடுங்க’ன்னு சொன்னேன்.
‘ஏன்’னு கேட்டாரு. ‘இல்ல. நான் கதை சொல்லும்போது உங்க கான்சன்ட்ரேஷன் அதுல இருக்கும். அப்புறம் நான் சொல்றதை நீங்க எப்படி கேட்பீங்க’ன்னு சொன்னேன். ‘அடி செருப்பால…ன்னு சிவாஜி சொல்லிட்டு யாருக்கிட்டடா சொல்ற கான்சன்ட்ரேஷன்? அது இதுன்னு பிளடி…?
நான் இப்படி இருப்பேன்டா… டயலாக் படிப்பாங்கடா… மண்டையில அதான்டா இருக்கும். வேற எதையும் பார்க்க மாட்டேன்டா. எனக்கு நினைப்பு ஒண்ணு மட்டும்தான்டா நடிப்புதான். உனக்கு என்ன தெரியும்? கான்சன்ட்ரேஷன்… போடா ப்ளடி… உன் கதையும் வேணாம் ஒண்ணும் வேணாம்’னு சொல்லி திட்டி அனுப்பி விட்டாராம் சிவாஜி. எனக்கு இப்படி ஒரு தப்பு பண்ணிட்டோமேன்னு ஃபீல் ஆனது.
அப்புறம் மறுநாள் என்னைக் கூப்பிட்டுப் பேசி பாராட்டி ‘இனி நீ தான் சிவாஜி புரொடக்ஷன்ஸ்சுக்கு டைரக்டர்’னு சொன்னாராம். அந்தக் கதை தான் நீதியின் நிழல் படமானது. ஏற்கனவே வி.சி.குகநாதன் அந்தக் கதையை சிவாஜியிடம் சொல்லி இருந்தாராம். டைரக்டருக்கு அந்த ரெண்டு பையனையும் போடுங்கன்னு சிவாஜிதான் சொன்னாராம். அவர்கள் தான் பாரதி, வாசு. சிவாஜி, ராதா, பிரபு, நம்பியார் நடித்த இந்தப் படம் 1985ல் வெளியானது. சங்கர் கணேஷ் இசை அமைத்துள்ளார்.
வடிவேலு ஒரு முட்டாள் : சமீபத்தில் வடிவேலு ஒரு 10 youtube-பர்கள் சேர்ந்து சினிமாவை அழித்துக் கொண்டு வருகிறார்கள். அவர்களை தூங்க...
TVK Vijay: தவெக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை கரூர் சென்றிருந்த போது அவரை காண பல்லாயிரம் மக்கள் கூடியதில் கூட்ட...
நான் கைக்கூலி அல்ல தினக்கூலி : kpyபாலா இன்டர்நேஷனல் கைக்கூலி அவர் தமிழ்நாட்டுக்கு பேராபத்து என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி பாலா...
TVK Vijay: கரூர் தவெக கட்சி கூட்டத்தின் போது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து இருக்கும்...
TVK Vijay: தவெக கட்சியின் மாவட்ட பயணத்தில் கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த சந்திப்பில் 41க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில்...