உதய் கே. எழுதி இயக்கியுள்ள படம் அஃகேனம். அருண்பாண்டியன் தயாரித்து நடித்துள்ள இந்தப் படம் இன்று வெளியாகி உள்ளது. இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம். ஸ்னீக் பீக், ரசிகர்களின் கருத்துகளைக் கேட்கும்போது பாசிடிவாகவே விமர்சனங்கள் வருகிறது. இசையும் சிறப்பாக உள்ளது.
அருண்பாண்டியன் மகள் கீர்த்தி, ஆதித்யா உள்பட பலர் நடித்துள்ளனர். அன்பிற்கினியாள் படத்துக்குப் பிறகு அருண்பாண்டியனும் அவரது மகள் கீர்த்தியும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். பரத் வீரராகவன் இசை அமைத்துள்ளார். டாக்ஸி டிரைவரும், விடுதலையான குற்றவாளியும் சந்திக்கின்றனர். அவர்கள் இருவரும் ஒரு ஆபத்தான சவாலை சந்திக்கின்றனர். அதை எப்படி கடக்கின்;றனர் என்பதே கதை.
தமிழில் ஃ என்ற எழுத்தை ஆயுத எழுத்து அல்லது அஃகேனம் என்பர். இது பிற எழுத்துகளை விட வலிமை வாய்ந்தது என்பதால் தான் ஆயுத எழுத்து எனப்படுகிறது. அதே போல படத்தில் 3 வலிமையான கேரக்டர்களுக்கு இடையில் நடக்கும் உறவு தான் இந்தப் படம் என்கிறார் இயக்குனர் உதய். படத்தைப் பற்றி அருண்பாண்டியன் என்ன சொல்றாருன்னு பாருங்க.
இந்தப் படத்துக்கு 3 சிறப்பம்சம் இருக்கு. எல்லாருமே புது டெக்னீசியன். நான் முதல்ல கீர்த்தி சொன்னதுக்கு அப்புறம் 2 வருஷத்துக்கு மன்னாடி கதையைக் கேட்டேன். கேட்ட உடனே எனக்கு அது பிடிச்சிடுச்சு. அவன் கூட மதன்னு ஒரு பையன் வந்தான். இவனுடைய அசிஸ்டண்ட் டைரக்டர். நல்லாருக்குப்பா. இதைக் கொஞ்சம் பிடிச்சிடுச்சுன்னா நானும் சேர்ந்து ஒர்க் பண்ணனும்னு சொன்னேன்.
முதல்ல போனவன் மீண்டும் வந்து ஒர்க் பண்ணலாம்னு சொன்னான். டைரக்டர், மியூசிக் டைரக்டர் எல்லாம் புதுசு. எனக்கு உண்மையிலயே இம்ப்ரசிவா இருந்தது. அவங்க ரொம்ப சின்சியாரிட்டி. முதல் ஷெடுல் ஒடிஸா போறோம். பைக்கைக்கூட டிரெய்ன்ல புக் பண்ணி எடுத்துட்டு வந்துட்டாங்க. பைக் புவனேஷ்வர்ல இல்லாம கொல்கத்தா போயிடுச்சு.
திரும்ப ஆளை அனுப்பி எடுத்துட்டு வந்தாங்க. எனக்கு ஊமை விழிகள் ஞாபகம் வந்துடுச்சு. கடின உழைப்பு. என் பிள்ளைகளோடு ரெண்டு வருஷம் இவங்க கூட தனியா இருந்தேன். அவ்ளோ அருமையா ஒர்க் பண்ணினாங்க என்கிறார் அருண்பாண்டியன்.
