தமிழ் சினிமாவில் சிவகுமாருக்கு என ஒரு முக்கிய பங்களிப்பு இருக்கிறது. பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார் .நடிகராக ஒரு பக்கம் இருந்தாலும் நல்ல ஓவியராகவும் சிவகுமார் அறியப்படுகிறார். காக்கும் கரங்கள் திரைப்படத்தின் மூலம் 1965 ஆம் ஆண்டு தனது திரை வாழ்க்கையை தொடங்கிய சிவக்குமார் அதிலிருந்து ஒரு பன்முக நடிகராக மாறினார்.
வித விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருடைய நடிப்பில் முக்கிய படமாக பார்க்கப்பட்டது ரோசாப்பூ ரவிக்கைக்காரி, சிந்து பைரவி போன்ற திரைப்படங்கள். ஆரம்பத்தில் இவர் சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கி படிப்படியாக முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1970களில் தான் அவருடைய வெற்றி பயணம் தொடங்கியது .
நல்ல குணசித்திர நடிகராகவும் அறியப்படுகிறார் சிவக்குமார். காக்கும் கரங்கள், கந்தன் கருணை, உயர்ந்த மனிதன் ,ரோசாப்பூ ரவிக்கைக்காரி ,சிந்து பைரவி போன்ற திரைப்படங்கள் அவருடைய திரை வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர் தனது சினிமா அனுபவங்களையும் வாழ்க்கையில் எதிர் நோக்கிய அனுபவங்களையும் ஒரு டைரியில் எழுதி வைத்துள்ளார் .
மேடை நாடகங்களிலும் நடித்துள்ள சிவக்குமார் இப்போது பல மேடைகளில் தனது பேச்சாற்றலால் அனைவருக்கும் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கூறி வருகிறார் .சிறந்த மேடை பேச்சாளரும் கூட. இந்த நிலையில் ரஜினி கமல் பற்றி ஒரு பேட்டியில் சிவக்குமார் கூறியது வைரலாகி வருகின்றது. சிவகுமாரும் கமலும் நெருங்கிய நண்பர்களாம். ஒரு சமயம் கமல் சிவக்குமாரிடம் இனிமேல் ரசிகர் மன்றம் எல்லாம் வேண்டாம் என சொல்லி இருக்கிறார்.
kamal
ஆனால் அவர் அந்த சமயமே ஒரு வளர்த்து வரும் நடிகராக இருந்ததனால் அதை தடுக்க முடியவில்லை .நான் இந்த திரையுலகில் மதிக்கிற இரண்டே நடிகர்கள் சிவாஜியும் கமலும் தான். அவங்க போட்ட உழைப்பு அவங்க காட்டிய வெரைட்டி இங்கு யாருமே பண்ணவில்லை .ரஜினியும் எம்ஜிஆரும் இருக்கிறார்கள் .அவர்கள் வேறு .அவர்கள் இரண்டு பேரும் பாப்புலர் ஹீரோக்கள். அதனால் மக்கள் அவர்களை கொண்டாடினார்கள். அதற்காக அவர்களை நான் கையெடுத்து கும்பிடுகிறேன். ஆனால் நடிப்பு துறையில் இவர்கள் காட்டிய வெரைட்டி வேறு யாரும் காட்டியதில்லை என கமலையும் சிவாஜியையும் பற்றி சிவக்குமார் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
