ரஜினியை வைத்து தம்பிக்காக புரோமோஷன் தேடிய விஷ்ணுவிஷால்.. கில்லாடிதான்

Published on: August 8, 2025
---Advertisement---

விஷ்ணு விஷால் தயாரிப்பில் அவருடைய தம்பி ருத்ரா கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி. இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஷ்ணு விஷால் தயாரித்திருக்கிறார். இது ஒரு ரொமாண்டிக் என்டர்டெய்னர் திரைப்படம் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கி இருக்கிறார். படம் ஜூலை 11ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

சமீபத்தில் தான் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழ் சினிமாவில் விஷ்ணு விஷால் ஒரு அறியப்படும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். கதைகளை நேர்த்தியாக தேர்ந்தெடுத்து நல்ல நல்ல படங்களை கொடுத்து வரும் விஷ்ணு விஷால் அடுத்து தம்பியை வைத்து ஒரு படத்தை தயாரித்திருக்கிறார்.

இசை வெளியீட்டு விழாவில் விஷ்ணு விஷாலின் தந்தை கண்ணீர் மல்க பேசியதை நாம் கண்கூடாக பார்த்தோம். ஒரு தந்தையாக அவருக்கு அது எப்பேர்ப்பட்ட பெருமை என்பதையும் நம்மால் உணர முடிகிறது. விஷ்ணு விஷால் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் வேளையில் அடுத்து அவருடைய தம்பியும் தனக்கென தனி முத்திரையை பதிப்பாரா என்பதை இந்த படம் வெளியான பிறகு நாம் பார்க்கலாம்.

விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஐசரி கணேஷ் அடுத்து மூன்று படங்களை தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தார். அதில் கட்டாகுஸ்தி படத்தின் இரண்டாம் பாகமும் அடங்கும். இப்படி தயாரிப்பிலும் அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் விஷ்ணு விஷால் தம்பியை ப்ரொமோட் செய்வதிலும் சரியான யுத்தியை கையில் எடுத்திருக்கிறார். சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் விஷ்ணு விஷால்.

oho enthan baby

oho enthan baby

அதில் கூலி படத்தில் இருக்கும் சிக்குடு பாடலுக்கு விஷ்ணு விஷாலும் அவருடைய தம்பியும் நடனம் ஆடி அதோடு அவர்களுடைய ஓஹோ எந்தன் பேபி படத்தைப் பற்றி ப்ரோமோஷன் செய்திருக்கிறார்கள். அண்ணனும் தம்பியும் ரஜினியின் பாடலுக்கு ஆடும் அந்த வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது. எதை எடுத்தால் சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் என்பதை நன்கு அறிந்து கொண்ட விஷ்ணு விஷால் ரஜினியின் அந்த பாடலில் இருக்கும் ஐகானிக் ஸ்டெப்பை ஆடி தன்னுடைய படத்தையும் மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்.


ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment