எம்ஜிஆர் ஒருமுறை கண்ணதாசனின் அண்ணன் மகனை ஓங்கி அறைந்ததாக ஒரு தகவல் வெளியானது. அது ஏன் அறைந்தார் என்ன நடந்தது என்பதை பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ஒரு காலத்தில் எம்ஜிஆரும் கண்ணதாசனும் ஒருவருக்கொருவர் நட்புடன் பழகி வந்தார்கள். அரசியல் காரணங்களுக்காக எம்ஜிஆரை கண்ணதாசன் கடுமையாக விமர்சிக்க வேண்டிய சூழ்நிலை.
அதனால் தான் தன்னுடைய படங்களுக்கு கண்ணதாசனை பாடல் எழுத எம்ஜிஆர் கூப்பிடுவது இல்லை. அந்த நேரத்தில் தான் வாலியை எம்ஜிஆர் பயன்படுத்திக்கொண்டார். எம்ஜிஆரும் கண்ணதாசனும் சேர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்கள். எம்ஜிஆர் புகழை மேலும் பரவலாக்க மிகப்பெரிய உதவியாக இருந்தது கண்ணதாசனின் பாடல்கள் தான்.
அதைப்போல கண்ணதாசனுக்கும் ஒரு சிறந்த மேடையாக அமைந்தது எம்ஜிஆரின் திரைப்படங்கள். கண்ணதாசனின் எழுத்தாற்றலை இந்த உலகம் அறிய செய்ததும் எம்ஜிஆரின் திரைப்படங்கள்தான். இருவருமே தமிழ் மீதும் கலைமீதும் மக்கள் மீதும் மிகுந்த பற்று கொண்டவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாகவும் இருந்திருக்கின்றனர்.
குறிப்பாக எம்ஜிஆரின் அரசியல் வாழ்க்கைக்கு பெரிய அச்சாணியாக அமைந்தது கண்ணதாசன் எழுதிய நான் ஆணையிட்டால் பாடல். இந்த நிலையில் கண்ணதாசனின் அண்ணன் மகனை எம்ஜிஆர் ஓங்கி அறைந்ததாக ஒரு தகவல் வெளியானது. அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதை விளக்கமாக கூறியிருக்கிறார் சித்ரா லட்சுமணன். கண்ணதாசனின் அண்ணன் மகன் தான் பஞ்சு அருணாச்சலம்.
lakshmi
பஞ்சு அருணாச்சலத்துடன் பிறந்தவர்கள் கே என் சுப்பு, கே என் லட்சுமணன், கே என் கிருஷ்ணன் ஆகிய மூவர். இதில் கே என் சுப்பு அன்னக்கிளி போன்ற பல படங்களின் தயாரிப்பாளர். கே என் லட்சுமணன் ஆரம்பத்தில் ஃபிலிமாலயா பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். அப்போது நடிகை லட்சுமியை பற்றி ஏதோ தவறாக அந்த பத்திரிக்கையில் எழுத அந்த விஷயத்தை எம்ஜிஆர் காதுக்கு லட்சுமி கொண்டு சென்றிருக்கிறார் .அதன் காரணமாகத்தான் இந்த சம்பவம் நடந்தது என சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.
