தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக திகழ்ந்து வருபவர் அஜித். அமராவதி திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமான அஜித் ஆரம்பத்தில் பல தோல்விகளை சந்தித்து படிப்படியாக முன்னேறி இன்று மாபெரும் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து நிற்கிறார். இது அவருடைய உழைப்புக்கு கிடைத்த பலன் என்றுதான் சொல்ல வேண்டும். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தானே கடினமாக உழைத்து விடாமுயற்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் இன்று ரஜினி கமல் இவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கிறார் அஜித்.
மற்ற நடிகர்களை விட அஜித் மிகவும் வித்தியாசமானவர். அது அனைவருக்குமே தெரியும். தற்போது கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவருடைய ஒரே பேஷன் இந்தியா சார்பில் கார் ரேசில் கலந்துகொண்டு நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதுதான். அதற்கு வயது எந்த விதத்திலும் தடையாக இருக்கக் கூடாது என்பதை நிரூபித்து இருக்கிறார் அஜித்.
சினிமாவில் எப்பொழுது அவர் அறிமுகமானாரோ அதற்கு முன்பிருந்தே ரேசில் அவருக்கு ஆர்வம் உண்டு .அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து தன்னுடைய பேஷனை எதற்காகவும் விட்டுக் கொடுக்காமல் இன்று அதை வெற்றியுடன் பயணித்து வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் வசந்த் ஆசை படத்தில் எப்படி அஜித்தை உள்ளே கொண்டு வந்தோம் என்பதை பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
அதுவரை வசந்துக்கு அமராவதி படத்தில் அஜித் நடித்திருக்கிறார் என்று தெரியாதாம். இந்த படத்திற்கு ஒரு அழகான முகமாக இருக்க வேண்டும் என தேடுதல் படலத்தை தொடங்கி இருக்கிறார்கள் .அந்த நேரத்தில் தூர்தர்ஷனில் வீணா வேஷ்டி என்ற விளம்பரத்தில் அஜித் படியிலிருந்து இறங்கி வருவார். அதைப் பார்த்த வசந்த் இந்த பையன் தான் வேண்டும் என சொல்லி இருக்கிறார்.
உடனே அருகில் இருந்தவர்கள் இவர் அமராவதி படத்தில் நடித்திருக்கிறார் என்று கூறினார்களாம் .அப்போது வரைக்கும் வசந்த் அமராவதி படத்தை பார்க்கவே இல்லையாம். அதன் பிறகு தான் அந்த படத்தையும் பார்த்துவிட்டு அஜித்தை ஆசைப்படத்திற்காக அணுகினோம் என ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
