களத்தூர் கண்ணம்மாதான் குழந்தை நட்சத்திரமாகக் கமல் அறிமுகமான முதல் படம். அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ஜெமினி கணேசன். அந்தக் காலகட்டத்தில் சினிமா உலகில் மூவேந்தர்களாக இருந்தவர்கள் யாருன்னா எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிகணேசன். முதல் திரைப்படத்தில் ஜெமினிகணேசனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். சிவாஜியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்ற முதல் படம் பார்த்தால் பசி தீரும்.
சினிமா உலகில் மூவேந்தர்களாக இருந்தவர்களில் முதலில் இருந்த எம்ஜிஆரைக் கமல் சந்தித்தது ஆனந்த ஜோதி என்ற படத்தில் தான். அந்தப் படப்பிடிப்பில் கமலுடன் மிக நீண்ட நேரம் எம்ஜிஆர் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது கமலைப் பார்த்து எம்ஜிஆர், ‘எதிர்காலத்தில் நீ என்னவாகணும்னு ஆசைப்படுறே?’ன்னு கேட்டாராம். அதற்கு மிகப்பெரிய நடிகனாக வரணும்னு எம்ஜிஆருக்கிட்ட கமல் சொல்லவில்லை.
விஞ்ஞானியாக ஆசைப்படுறேன்னு சொன்னாராம் கமல். ஆனால் காலத்தின் கணக்கு வேறு மாதிரியாக இருந்தது. அதனால்தான் விஞ்ஞானியாக வேண்டும் ஆசைப்பட்ட கமல் பின்னாளில் கலைஞானியாக ஆசைப்பட்டார். அதுமாதிரி தான் விஞ்ஞானியாக வேண்டிய கமல் இன்று கலைஞானியாகி பல துறைகளிலும் ஜொலித்து கலைஞானியானார்.
1963ல் விஎன்.ரெட்டி, ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்த படம் ஆனந்த ஜோதி. கமல் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தேவிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்துள்ளார். இந்தப் படத்துக்குக் கதை எழுதியவர் ஜாவர் சீத்தாராமன். பாடல்கள் அனைத்தும் அருமை. காலமகள், கடவுள் இருக்கின்றான், நினைக்கத் தெரிந்த, ஒரு தாய் மக்கள், பல பல, பனியில்லாத மார்கழியா, பொய்யிலே பிறந்து ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.
