தற்போது கூலி படத்தின் ப்ரோமோஷன் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கின்றது. ஒரு பக்கம் ஸ்ருதிஹாசன் இன்னொரு பக்கம் லோகேஷ் கனகராஜ் என எந்த யூட்யூப் சேனலை ஓப்பன் பண்ணாலும் இவர்களின் பேட்டிதான் போய்க் கொண்டிருக்கின்றது.லோகேஷ் இயக்கத்தில் ரஜினி. ஏற்கனவே ரஜினி என்றாலே மாஸ் ஸ்டைல். அதில் லோகேஷ் ரஜினியை எந்தளவுக்கு மாஸா காட்டியிருக்கிறார் என்பதை பார்க்கவே ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகஸ்ட் 14 ஆம் தேதி நெருங்கும் வேளையில் படத்தின் ஹைப்பும் ஏறிக் கொண்டே இருக்கின்றது. அதற்கு காரணம் லோகேஷ் கொடுக்கும் பேட்டிதான். இந்தப் படத்தில் ரஜினியை எப்படியெல்லாம் பார்க்க வேண்டும் என நினைத்தோமோ அப்படியெல்லாம் இருப்பார் என்றும் லோகேஷ் கூறியிருக்கிறார். ரஜினியுடன் இணைந்து பல பெரிய பெரிய நடிகர்களும் படத்தில் இருப்பது கூடுதல் பலமாக இருக்கின்றது.
ப்ரீ புக்கிங்கில் கூலி படம் வசூலை அள்ளிக் கொண்டிருக்கின்றது. ஆனால் ஏ சர்டிஃபிக்கேட் படத்திற்கு கொடுத்ததுதான் பெரிய வருத்தம்.என்ன இருந்தாலும் ரஜினி படத்திற்கு என தனி மவுசுதான். இந்த நிலையில் லோகேஷ் அடுத்து எந்த படத்தை இயக்கப் போகிறார் என்ற ஆர்வமும் அனைவருக்கும் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு பிறகு கண்டிப்பாக கைதி 2 திரைப்படம்தான்.
ஆனால் அந்தப் படம் ஆரம்பிக்க இன்னும் 8 மாதங்கள் ஆகும் என்று சொல்லிவிட்டார் லோகேஷ். அதற்கு முன்பாக அவர் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் தான் இயக்க இருக்கிறார். இது ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாகத்தான் இருக்கப் போகிறது. அதற்காக லோகேஷை மூன்று மாதங்கள் முடி வெட்டக் கூடாது, ஷேவ் செய்ய கூடாது என்றெல்லாம் அருண் மாதேஸ்வரன் கூறியிருந்தாராம்.

அதனால் கூலி படத்தின் படப்பிடிப்பின் போது கூட லோகேஷ் அதிகமான முடி தாடியுடன் தான் இருந்தாராம். ஆனால் இப்போது கூலி பட ப்ரோமோஷன் இருப்பதால் அருண் மாதேஸ்வரன் லோகேஷுக்கு அனுமதி கொடுத்திருக்கிறாராம். அதாவது லைட்டாக முடி வெட்டிக் கொள் மற்றும் தாடியை ட்ரிம் செய்து கொள் என்று அனுமதி கொடுத்திருக்கிறாராம். அதனால் தான் இப்படி இருக்கிறேன் என லோகேஷ் கூறினார்.
