இனிமேல் என்ற மியூஸிக் ஆல்பத்தில் ஸ்ருதிஹாசனும் லோகேஷ் கனகராஜும் சேர்ந்து நடித்தார்கள். அந்த ஆல்பத்தில் இருவரும் மிக நெருக்கமாக நடித்திருந்தார்கள். அதை பார்த்து நெட்டிசன்கள் லோகேஷும் ஸ்ருதி ஹாசனும் காதலிக்கிறார்கள் என்றும் டேட்டிங் செய்கிறார்கள் என்றும் ரூமரை கிளப்பி விட்டனர். ஆனால் அது எதை பற்றியும் லோகேஷ் கவலைக்கொள்ளவில்லை.
அந்தப் படத்தில் லோகேஷ் எப்படி நடித்தார்? என்பதை பற்றி ஸ்ருதிஹாசன் ஒரு பேட்டியில் கூறினார். விக்ரம் படப்பிடிப்பு தளத்திற்கு ஒரு நாள் ஸ்ருதிஹாசன் செல்ல அங்கு லோகேஷை பார்த்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். லோகேஷை திரையில் பார்த்தால் ஒரு வைப் இருக்கும் என ஸ்ருதிஹாசனுக்கு தோன்றியிருக்கிறது. ஆனால் முதலில் லோகேஷ் நடிக்க மாட்டேன் என்றுதான் சொன்னாராம்.
ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பு என்றதும் அதன் பிறகு ஒப்புக்கொண்டாராம் லோகேஷ். உடனே என்னுடைய அடுத்த படத்தில் நீங்கள்தான் நடிக்கணும். ரஜினி சார் படம். நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது என ஸ்ருதியை பார்த்து லோகேஷ் கூறியிருக்கிறார். அதுதான் கூலி படத்தில் ஸ்ருதியின் கேரக்டரான ப்ரீத்தி கதாபாத்திரம். உண்மையிலேயே கூலி படத்தை பற்றி பேசும் போது அனைவரும் ஸ்ருதியின் கேரக்டர் பற்றித்தான் பெரிதாக பேசுகிறார்கள்.
அந்தளவுக்கு ஸ்ருதியின் கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்ததாகத்தான் இருக்கும் என அனைவரும் பார்க்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமில்ல அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஒரு பண்டிகைதான். ஏனெனில் ரஜினியுடன் இன்னும் பல நட்சத்திரங்கள் ஒன்றாக ஒரே திரையில் ஜொலிக்க போகிறார்கள்.
நாகர்ஜூனா ரஜினிக்கு வில்லனாக, நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினியும் சத்யராஜும் ஒரே ஸ்க்ரீனில், ரஜினியுடன் கமலின் மகள், மஞ்சுமெல் பாய்ஸ் புகழ் சௌபின் சாஹிரின் கமெர்ஷியல் ஆக்டிங், இதெல்லாம் தாண்டி பூஜா ஹெக்டேவின் துடிப்பான நடனம் என படத்தில் ஒரு பெரிய ஹைப்பே இருக்கிறது.
