தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. படத்திற்கு படம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ”தலைவன் தலைவி” திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் முதல் முறையாக நடித்துள்ள விஜய் சேதுபதி குடும்ப ரசிகர்களை கவர்ந்துள்ளார். கதாநாயகியாக நடித்த நித்யா மேனன் தன்னுடைய பங்கிற்கு போட்டி போட்டு நடித்துள்ளார்.
இவர்களுடன் யோகி பாபு, தீபா சங்கர், காளி வெங்கட், மைனா போன்றவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளனர். கதைப்படி குலதெய்வ கோயிலில் தனது பெண் குழந்தைக்கு முதல் மொட்டை போட பெற்றோர்களுடன் நித்தியா மேனன் வருகிறார். இந்த விஷயம் அவரைப் பிரிந்து அசைவ ஓட்டலை நடத்தி வரும் விஜய் சேதுபதியின் பெற்றோர்களுக்கு தெரிகிறது. எங்களிடம் சொல்லாமல் மொட்டை போடுவதாக என்று கோயிலில் சண்டை வெடிக்கிறது.
அதிலிருந்து படம் தொடங்கி விஜய் சேதுபதி, நித்யா மேனன் திருமணம், குடும்ப பிரச்சனை பிரிவு, அடிதடி, போலீஸ் புகார் என படம் நகர்கிறது. கடைசியில் கோயிலில் என்ன நடந்தது..? விஜய் சேதுபதியும் நித்யாமேனனும் சேர்ந்தார்களா பிரிந்தார்களா..? என்று மண் மனம் மாறாமல் குடும்ப ரசிகர்களுக்கு ஏற்றவாறு படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். இந்தக் கதை மக்களிடம் பெரிதும் கனெக்ட் ஆகி நாளுக்கு நாள் படத்தின் வசூல் அதிகரித்து செல்கிறது.

மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று தலைவன் தலைவி திரைப்படம் உலக முழுவதும் 80 கோடி வசூலித்துள்ளது. இதை இந்தப் படத்தை தயாரித்த சத்திய ஜோதி நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் விஜய் சேதுபதியின் மார்க்கெட் எகிறி உள்ளது. அடுத்தடுத்த படங்களில் கிட்டத்தட்ட 40 கோடி வரை சம்பளம் கேட்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இனி விஜய் சேதுபதி யாருக்கும் ஈவு, இரக்கம் காட்டி நடிக்கப் போவதில்லை கதைக்காக மட்டுமே நடிப்பேன் என பேட்டி ஒன்றில் அவரே தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது,” இதுவரை கதைக்காக கால்ஷீட் கொடுத்ததை விட நட்புக்காக கால்ஷீட் கொடுத்தது தான் அதிகம், இதனால் குணச்சத்திரம், வில்லன் இன்னும் சில படங்களில் கதை கூட கேட்காமல் நடித்தேன். இனி அப்படி நடிக்கப் போவதில்லை. கதையின் நாயகனாக மட்டுமே நடிப்பேன்”. என்று தெரிவித்துள்ளார். இதனால் தனது வழக்கமான பாணியில் இருந்து விடுபட்டு புதியபாதை பயணிக்க திட்டமிட்டுள்ளார் விஜய் சேதுபதி.
