எனக்கு எதுவும் வேண்டாம்.. விஜயகாந்த் மகன் என்பதே போதும்.. விஜய பிரபாகரன் கண்ணீர்..

Published on: August 9, 2025
vijaya prabakaran
---Advertisement---

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருந்தவர் விஜயகாந்த். கிராமப்புறங்களில் இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருந்தனர். ரஜினி, கமல் என பெரிய நடிகர்கள் கோலோச்சியபோது அறிமுக நடிகராக வந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்தவர்.
இவரின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது. அதில் கேப்டன் பிரபாகரன் முக்கியமான படம்.

இது விஜயகாந்தின் நூறாவது படமாக வெளிவந்தது. விஜயகாந்தின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் தயாரித்த இப்படத்தை இயக்குனர் ஆர்.கே செல்வமணி இயக்கி இருந்தார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ரஜினி, கமல், பிரபு போன்ற நடிகர்களுக்கு நூறாவது படம் தோல்வி அடைந்த நிலையில் விஜயகாந்த் இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.

விஜயகாந்த் மறைந்துவிட்ட நிலையில் வருகிற 22ஆம் தேதி இப்படம் மீண்டும் வெளியாகிறது. இதையடுத்து நேற்று சென்னை கமலா தியேட்டரில் இந்த படம் தொடர்பான விழா நடந்தது. இந்த விழாவில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார்.

#image_title

தமிழ் சினிமாவில் கேப்டன் பிரபாகரன் எப்போதும் ஒரு எவர்கிரீன். இந்த படத்தை அப்பாவும், வாப்பா ராவுத்தரும், இயக்குனர் செல்வமணி சாரும் மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கி இருந்தனர். இந்த படத்தை நாம் கேப்டனின் முதல் படமாக கொண்டாட வேண்டும். கேப்டனின் 156 படங்களும் மீண்டும் ரீலீஸ் ஆகும். அதை இப்போதுள்ள இன்றைய தலைமுறைகள் பார்ப்பார்கள். மேலும் திரைப்படம் தொடர்பாக படிக்கும் மாணவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். என் அப்பா ஒவ்வொரு படத்திலும் சண்டை காட்சிகள் எப்படி எடுக்கப்பட்டது, ஸ்டண்ட் நடிகர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டனர் என எல்லாமே என்னிடம் சொல்லுவார்.

கேப்டன் பிரபாகரன் ரிலீசான போதுதான் நான் பிறந்தேன். எனவே அது காரணமாகவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் நினைவாகவும் எனக்கு விஜய பிரபாகரன் என பெயர் வைத்தார் அப்பா. ரீ ரிலீஸ் ஆகியுள்ள இந்த படம் கண்டிப்பாக 100 நாட்கள் ஓடும். குடும்ப விழாக்களுக்கு போகவில்லை என்றாலும் அன்பாக அழைத்தால் கட்சி, சினிமா நண்பர்களின் விழாவுக்கும் போகவேண்டும் என என் அப்பா எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதனால்தான் இந்த விழாவுக்கு வந்தேன். எனக்கு எம்.பி பதவி எல்லாம் தேவையில்லை.. விஜயகாந்தின் மகன் என்கிற பெருமையே போதும்’ என விஜய பிரபாகரன் கண்ணீர் விட்டு பேசினார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.