
latest news
Pandian Stores2: ராஜியை வீட்டுக்கு அழைத்து செல்ல முடிவெடுக்கும் வடிவு…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
வடிவு முத்துவேலுவிற்காக காத்திருக்க அவர் வந்ததும் குமார் குறித்து கேட்கிறார். உன்கிட்ட சக்திவேல் சொல்லலையா. நாளைக்கு குமார் வந்துவிடுவான் என்கிறார். வடிவு ரொம்ப சந்தோஷப்படுகிறார்.
முத்துவேல் ரூமில் இருக்க அவர் வந்து ராஜியை வீட்டுக்கு அழைச்சிட்டு வரணும். அரசி வந்து இருந்த போது விஷயம் தெரிந்தவுடன் அவங்க அப்பா உடனே கூப்பிடதும் அவ கிளம்பிட்டா? அதுபோல நானும் அரசி இடத்தில் இருந்ததா ராஜி சொன்னாளே.
அப்போ அவளும் எப்போ என்னை வந்து அழைச்சிட்டு போனீங்கனு கேட்கிற மாதிரி தானே என்கிறார். பிரச்னையால் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. என்னைக்குமே கதிரை பிடிச்ச மாதிரி அவங்க காட்டிக்கலையே என்கிறார். வடிவு நம்ம பெண்ணை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வரணும் என்கிறார்.
காலையில் கோமதி மருமகள்கள் வாசலில் கோலம் போட்டு கொண்டு இருக்க ராஜி நான் தூங்கவே இல்லை என்கிறார். மீனா ஏன் எனக் கேட்க மயில் தனக்கு தெரியும் என்கிறார். மீனா, ராஜி அவரை கேள்வியாக பார்க்க அரசி விஷயம் தெரிந்தவுடன் எப்படி அழைச்சிட்டு வந்தாங்களோ. அது போல ராஜியும் அவங்க வீட்டுக்கு போக ஆசைப்படுறா என்கிறார்.
இதை கேட்டு ராஜி கடுப்பில் எழுந்து நிற்க அப்போ வரும் கோமதி யார் யாரு வீட்டுக்கு போக போறா எனக் கேட்க தங்கமயில் அவரிடமும் சொல்கிறார். இதில் கடுப்பான கோமதி அந்த குமாரு அரசியை மிரட்டிக்கட்டிக்கிட்டான். என் பையன் அப்படியா செஞ்சான்.

நீ வேற மாசமா இருக்க. அதான் சும்மா இருக்கேன். ஒழுங்கா உள்ள போ என அவரை திட்டி அனுப்புகிறார். ராஜி கடுப்பில் ரூமுக்கு வந்து அமர கதிர் என்ன கோபமா இருக்கீயா எனக் கேட்கிறார். ஆமா என் மேலயா எனக் கேட்க கொஞ்ச நேரம் வரை உன் மேல உப்போ எல்லார் மேலையும் என்கிறார்.
என்ன ஆச்சு எனக் கேட்க மயில் சொன்ன விஷயத்தை சொல்ல கதிரும் அவங்க சொல்றது சரிதானே என்கிறார். இதில் கடுப்பான ராஜி அவரை திட்டிவிட்டு செல்கிறார். அடுத்தநாள் காலை குமார் விடுதலையாகி வீட்டிற்கு வருகிறார். முத்துவேல் குடும்பம் அவரை சந்தோஷமாக அழைத்து கொண்டு வீட்டிற்குள் வருகின்றனர்.
இதை பார்க்கும் சரவணன் பாண்டியனிடம் சென்று குமார் வந்ததை சொல்கிறார். கோமதி உனக்கு யார் சொன்னா எனக் கேட்க இப்போ தான் பார்த்துவிட்டு வந்தேன் என்கிறார். குமார் வீட்டில் முத்துவேல் அவரை வீட்டிலேயே இரு. கேஸை நான் பார்த்துக்கிறேன் என்கிறார்.
பின்னர் வடிவு ராஜியை வீட்டிற்கு அழைத்து வர இருப்பதாக சொல்கிறார். எல்லாரும் அதிர்ச்சியுடன் அவரை பார்க்கிறார்.