தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவர் அஜித். சமீபத்தில் தான் திரையுலகில் அடியெடுத்து 33 ஆண்டுகள் நிறைவடைந்ததை கோலாகலமாக கொண்டாடினார். முன்னணி நடிகராக இருந்தாலும் எந்தவித பந்தாவும் இல்லாமல் குறிப்பாக எந்த ஒரு நடிகரும் செய்யாத செயலை அஜித் செய்தார். தனக்கு இனி ரசிகர் மன்றமே வேண்டாம் என்று கலைத்த ஒரே நடிகர் அஜித் தான்.
அதற்கு பல காரணங்கள் கூறுகிறார்கள். இருந்தபோதிலும் அஜித் எடுத்த இந்த துணிச்சலால் முடிவால் அவருக்கான ரசிகர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்க செய்கிறதே தவிர குறையவில்லை. மேலும் தனது படங்களின் எந்தவிதமான ப்ரோமோஷனிலும் கலந்து கொள்ள மாட்டார். இப்பொழுது நான் தான் வளர்ந்து விட்டேனே, இனி எதற்கு ப்ரோமோஷன் செய்ய வேண்டும். படம் வெளியான அன்று மக்கள் படம் பார்த்து நன்றாக இருந்தால் அதை கொண்டாட போகிறார்கள் இல்லையென்றால் அது எனக்கு ஒரு தோல்வி படமாக இருக்கும் என்று அஜித்தை ஒரு முறை சொல்லி இருக்கிறார்.
33 ஆண்டுகள் சினிமாவில் இருந்தும் அஜித் மீது எந்த ஒரு முகம் சுளிக்கும் அளவுக்கு புகார்கள் இதுவரை வந்ததில்லை. அதேபோல நடிப்பு, குடும்பம், பேஷன் என தனக்கான சுய ஒழுக்கத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நடிகராக இருந்து வருகிறார். தற்போது அஜித் உடைய முழு கவனமும் கார் ரேஸ் பக்கம் திரும்பி உள்ளது. துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித் மூன்றாம் இடம் பிடித்தார். அதேபோல அடுத்தடுத்து நடைபெற்ற ரேஸ்களில் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் என தொடர் வெற்றிகளை பதிவு செய்தார் அஜித்.
அதேபோல அவ்வப்போது பைக் ரைய்டுகளிலும் உலகம் சுற்றி வருகிறார். இப்படி நடிப்பை தாண்டி தனது பேஷன்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த ”குட் பேட் அக்லி” திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக அமைந்தது. ஆதிக்கவிச்சந்திரன் இந்த படத்தை ஒரு பேன் பாய் சம்பவமாக மாற்றிவிட்டார். இனி அஜித்தின் படம் அடுத்து எப்பொழுது வரும் ஏதாவது அப்டேட் கொடுக்க மாட்டார்களா என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளர், சினிமா விமர்சகருமான பிஸ்மி அஜித் பற்றிய அதிரடி கருத்தை கூறியுள்ளார் அதில்.” ஆசை படத்துக்கு ஹீரோ தேடிய போது எஸ்பிபி தான் அஜித்தை அறிமுகப்படுத்தி இந்த ஹீரோ பொருத்தமாக இருப்பான் என்று இயக்குனர் வசந்திடம் தெரிவித்தார். இப்படி தான் மகன் சரணுக்கு வந்த வாய்ப்பை அஜித்திற்கு கொடுத்துள்ளார் எஸ்பிபி. இப்படி இருக்கும்போது ’தன்னைத் தானே செதுக்கியவன்’ போன்ற வசனத்தை அஜித் இனி உபயோகிக்க கூடாது” என்று வலைப்பேச்சு பிஸ்மி அஜித்திற்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
