தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். 75 வயதிலும் இளம் ஹீரோகளுக்கு கடும் போட்டியளராக இருந்து வருகிறார். ரஜினியின் கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. முன்னதாக இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது. சமீபத்தில் வெளியான இதன் ட்டிரைலர் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அடுத்த வாரம் படம் ரிலீஸ் ஆக உள்ளதால் ப்ரீ புக்கிங் இதுவரை இல்லாத அளவிற்கு சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அதை 14 ஆம் தேதி ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாக உள்ள வார்-2 படத்தின் ப்ரீ புக்கிங்கை விட கூலி படத்திற்கு அதிக டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளது. லியோ படத்தில் லோகேஷ் கனகராஜ் ரைட்டிங்கில் திருப்தி இல்லை என்று பல விமர்சனங்கள் வந்தது. அதை கூலி படத்தில் லோகேஷ் சரி செய்வார் என்றும் கைதி, விக்ரம் போல் ஒரு ஸ்ட்ராங்கான ரைட்டிங் இந்த படத்தில் இருக்கும் என்று ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
தமிழ் சினிமாவில் இதுவரை எந்த திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் சாதனை படைத்ததில்லை. கூலி 1000 கோடி அடிக்கும் என பல பிரபலங்கள் தங்கள் கருத்துகளை கூறி வந்தனர். இந்நிலையில் இந்த படத்திற்கு ‘A’ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் குடும்ப ரசிகர்களின் வரவு இந்த படத்திற்கு குறையும். அதனால் வசூல் பாதிக்கப்படும். அப்படி இருக்கும் போது ஆயிரம் கோடி வசூலை எட்ட முடியாது என்று மூத்த பத்திரிகையாளரும் சினிமா விமர்சகர்மான செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது,
“லோகேஷ் இதுவே விக்ரம் படத்திற்கு இந்த மாதிரி ‘A’ சர்டிபிகேட் கொடுத்திருந்தால் ஒத்துக்கொள்வாரா.? என்ற கேள்வி எழுப்பி உள்ளார். அவர் நினைத்திருந்தால் அதிக வன்முறை காட்சிகளை நீக்கி இருக்கலாம். தேவையில்லாததை கட் செய்து இருக்கலாம். ஆனால் அவர் எதுவுமே செய்யாமல் படம் இப்படியே ரிலீஸ் ஆக வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார். இது கண்டிப்பாக படத்திற்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது”.

“இதில் ரஜினி சம்பந்தப்பட்ட வாய்ப்பு இல்லை ஏனென்றால் அவர் இயக்குனர்களின் ஆர்டிஸ்ட் இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதை மட்டும் செய்யக் கூடியவர். இதனால் அவர் கபாலி படத்தில் ஏன் நடித்தோம் என்ற அளவிற்கு மன உளைச்சலுக்கு ஆளானார். அந்த திரைப்படம் முழுவதும் மலேசியாவில் நடப்பதாக இருக்கும். அதில் மலேசிய தமிழர்கள் மிகவும் மோசமான சித்தரித்தும், வன்முறை காட்சிகளும் எல்லை மீறி இருக்கும். படம் பார்த்துவிட்டு அங்குள்ள தமிழர்கள் எங்களை ஏன் இந்த மாதிரி காட்டினீர்கள் என்று கேட்டுள்ளனர்”.
”கடும் எதிர் அலைகள் கிளம்பியதால் ரஜினி மிகவும் மன வருத்தப்பட்டார். இந்த படம் நாம பண்ணி இருக்க வேண்டாம் என்று கூட நினைத்தார்”. என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார். உச்சக்கட்ட வன்முறை காட்சிகளை கொண்ட அந்தப் படத்திற்கு மட்டும் ‘U’ சர்டிபிகேட் கூலி படத்திற்கு ‘A’ சர்டிபிகேட் என்ற ரசிகர்கள் ஆதங்கத்துடன் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
