தன்னுடைய படைப்பால் தமிழ் சினிமாவை வேறு ஒரு பரிணாமத்தில் காட்டி மக்களை என்டர்டைன் செய்வதில் வல்லவர் மிஷ்கின். தமிழ் சினிமாவில் சுலபமாக வெல்வதற்கு ஒரு வழி மசாலா படங்களை எடுப்பது தான். ஆனால் இவர் வழக்கமான மசாலா கதைகளை பின்பற்றாமல் கதையை மட்டும் மையமாக வைத்து அதை சுற்றி சுவாரஸ்ய கதாபாத்திரங்கள் அமைத்து ரசிக்கத்தக்க படங்களை எடுப்பார் மிஷ்கின்.
சக்சஸ்ஃபுல் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் சமயத்தில் நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். குணச்சித்திரம் வில்லன் என தனக்கு கிடைக்கப்பட்ட வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்தி தன்னுள் இருக்கும் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் மிஷ்கின் நீண்ட நாட்களாக அவரின் இயக்கத்தில் ட்ரெயின் திரைப்படம் தயாராகி வருகிறது. பொதுவாக இயக்குனர்கள் தங்களின் படங்கள் ரிலீஸ் அன்று கூட கதைகளை சொல்ல மாட்டார்கள்.
ஆனால் மிஷ்கின் இந்த ட்ரெயின் படத்தின் கதையை தான் பங்கேற்கும் சினிமா சம்பந்தமான அனைத்து மேடைகளிலும் பேசியுள்ளார். தன்னுடைய ட்ரெயின் படம் முழுக்க முழுக்க ரயில் பயணத்தை பற்றிய கதை. ஒரு ராட்சத புழு எப்படி தன்னோட பிள்ளைகளை சுமந்து கொண்டு தவழ்ந்து போய் பத்திரமாக வெளியே விடுகிறதோ அதே மாதிரி தான் ட்ரெயின் படமும் என்று சொல்லி இருக்கிறார். கதைப்படி ஹீரோவுக்கு இந்த உலகத்தில் வாழ விருப்பமே இல்லை ஆனால் திடீரென்று ஒரு நாள் ரெயிலில் பயணிக்கிறார். அந்தப் பயணம் அவரது வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதுதான் கதை.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன் அதில் அவர் கூறியதாவது,” மிஷ்கின் சார் என்னை ட்ரெயின் படத்திற்காக ஒரு பாடலை பாட தான் முதலில் அழைத்தார். நான் அங்கு சென்ற போது ’ஒரு கெஸ்ட் ரோல் இருக்கு நீங்க நடிக்கணுமா’ என்று கேட்டார். நான் சம்மதித்து நடித்தேன். அவருடைய இயக்கத்தில் பணி புரிவது ஒரு தனித்துவமான அனுபவம்”.
”நான் சம்மதம் சொன்னவுடன் அவர் முகத்தில் புன்னகை தெரிந்தது. அவர் எவ்வளவு படைப்பாற்றல் மிக்கவர் என்பது அனைவருக்கும் தெரியும்”. என்று பேசியுள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் நிச்சயம் ஒரு பீல் குட் படமாக தான் இருக்கும் என்று ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
