
Cinema News
சிவகார்த்திகேயன் இல்லனா சிம்பு!… எஸ்.டி.ஆரிடம் போன இயக்குனர்.. ஒரே குழப்பமா இருக்கே!..
சிவகார்த்திகேயனை வைத்து டான் என்கிற படத்தை இயக்கியவர் சிபி சக்கரவர்த்தி. 2022 ஆம் வருடம் வெளியான இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்து 100 கோடி வரை வசூல் செய்தது. எனவே இதே இயக்குனரின் இயக்கத்தில் இன்னொரு படத்திலும் நடிக்க முடிவெடுத்தார் சிவகார்த்திகேயன்.
ஒரு கதையை உருவாக்கினார் சிபி சக்கரவர்த்தி. ஆனால் அமரன் படம் சூப்பர் ஹிட் அடித்து 300 கோடி வசூல் செய்ய சிவகார்த்திகேயன் ரேஞ்ச் மாறிவிட்டது, சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி போன்ற படங்களில் நடிக்க போய்விட்டார். அந்த இரண்டு படங்களுக்கு பின் சிபியின் படத்தில் நடிக்க முடிவெடுத்தார்.
ஆனால் கதையில் சிவகார்த்திகேயன் சொன்ன சில மாற்றங்களை சிபி ஏற்க வில்லை. எனவே அப்படத்திலிருந்து சிபி வெளியேறினார். மேலும் ஆந்திரா பக்கம் போய் தெலுங்கு பட நடிகர் நானியை வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அது நடக்கவில்லை.

இந்த பக்கம் குட் நைட் பட இயக்குனர் விநாயகர் சந்திரசேகரை அழைத்து தனக்கு ஒரு கதையை உருவாக்க சொன்னார் சிவகார்த்திகேயன். ஆனால் சிபி – சிவகார்த்திகேயன் படத்திற்கு பைனான்ஸ் செய்திருந்த பைனான்சியர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை சிபிதான் இயக்க வேண்டும். இல்லையெனில் நான் கொடுத்த 20 கோடி பணத்தை வட்டியோடு கொடுங்கள் என நெருக்கடி கொடுத்தார். எனவே இப்போது வேறு வழியில்லாமல் சிபியை அழைத்து சமாதானம் பேசி சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை அவரே இயக்கவிருக்கிறார். வேலைகள் நடந்து வருகிறது.
சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து சிபி வெளியேறியதும் இந்த படத்திற்கு பைனான்ஸ் செய்த பைனான்சியர் சிம்புவிடம் பேசி நீங்கள் இந்த கதையை கேளுங்கள்.. உங்களுக்கு பிடித்திருந்தால் நாம் செய்வோம்.. என சொல்ல சிம்புவும் சிபியை அழைத்து அந்த கதையை கேட்டார். படத்தின் முதல் பாதி சிம்புவுக்கு பிடித்திருந்தாலும் இரண்டாம் பாதியில் சில மாற்றங்களை சொன்னார். ஆனால் சிபி அதை ஏற்கவில்லை. எனவே அது டேக் ஆப் ஆகவில்லை. தற்போது சிவகார்த்திகேயனையே சிபி மீண்டும் இயக்கவிருக்கிறார்.