Connect with us
tamanna

Cinema News

உடலை மறைக்க 3000 கோடிக்கு நகை வாங்கினாரா தமன்னா?.. பீதியை கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்

’உன்ன வெள்ளாவி வச்சுதான் வெளுத்தாங்களா.. இல்ல வெயிலுக்கு காட்டாம வளதாங்களா’.. என்று பாடலில் வரும் வரிகளுக்கு இணங்க தோற்றம் கொண்டவர் தமன்னா. தனக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அது மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து தென்னிந்தியாவில் தவிர்க்க முடியாத நடிகையாக தன்னை உருவாக்கினார் தமன்னா.

அதன் பிறகு பாலிவுட் சென்று அங்கு ஒரு சில படங்களிலும் நடித்தார். அங்கே சரியான வெற்றி கிடைக்காமல் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த தொடங்கினார். பாலிவுட் படங்களைப் பொறுத்தவரை ஐட்டம் டான்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அப்படி அதிக கவர்ச்சியுடன் ஒரு பாடலுக்கு நடனமாடி முழு படத்திற்கு வாங்க வேண்டிய சம்பளத்தை அந்த ஒரு பாடலுக்கு வாங்கி வகிறார் தமன்னா. கடைசியாக ஜெய்லர் படத்தில் வெளியான ”காவாலா” பாடலில் தமன்னா போட்ட ஆட்டம் ரசிகர்களை கிரங்கடிக்க செய்தது.


”தற்போது பட வாய்ப்புகள் குறைந்தாலும் மேலும் மேலும் பல கோடிக்கு அதிபதியாகி வருகிறார் என நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மேலும் அவர் கூறியதாவது,” மோசடி பணத்தில் 3000 கோடிக்கு தங்க நகை வாங்கினார் தமன்னா. தமிழ் சினிமா நடிகைகளில் அதிகமான தங்கம் வாங்கி இருப்பது தமன்னா தான். நடிப்பை தாண்டி பல பிசினஸ்களை செய்து வரும் தமன்னா அதில் ஒன்றான கோல்டன் கோல்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்”.

”அந்த நிறுவனத்திற்கு 300 கிலோ தங்கம் வாங்கி இருக்கிறார் தமன்னா. இந்த விஷயம் அமலாக்கத்துறைக்கு தெரிந்து தமன்னாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நிச்சயமாக இந்த ஊழல் நிரூபிக்கப்படுமேயானால் தமன்னா ஜெயிலுக்கு போவது உறுதி. அதில் எந்த சந்தேகமும் இல்லை. தமன்னாவிற்கு கல்யாணமும் ஆகவில்லை. காதலும் தற்போது முறிந்து விட்டது. இருந்தும் தமன்னாவிற்கு இவ்வளவு பணம் எதற்கு, எப்படி வந்தது? என்று சொன்னால் ஒரு பாடலுக்கு அறையும் குறையுமாக படு கவர்ச்சியாக ஆடுவது”.

”அதுமட்டுமின்றி ஜவுளிக்கடை திறப்பு நகைக்கடை திறப்பு என அனைத்திலும் சம்பாதிக்கிறார். அது மட்டும் இல்லாமல் சமீபத்திய பேட்டி ஒன்றில் தமன்னா பரபரப்பான செய்தி ஒன்று சொன்னார்.’ நான் அந்த மாதிரி காட்சிகளை எல்லாம் நடிப்பதில்லை. அப்படி வரும் தகவல் எல்லாம் பொய். அந்த மாதிரி காட்சிகளில் நான் டூப் போட்டு நடிக்க வைப்பேன்’ என்று சொல்லி இருக்கிறார். கண்டிப்பாக இது நம்ப தகுந்த விஷயமாக தெரியவில்லை”.

”அப்படி டூப் போட்டு எடுத்தால் எதற்கு அவருக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்க வேண்டும். ஆனால் தற்போது அப்படியே அந்தர் பல்ட்டி அடித்து வருகிறார். ரசிகர்களின் பிடியில் சிக்கி தான் சொன்ன பொய்யால் பயங்கர ட்ரோலில் சிக்கி வருகிறார். தற்போது இதுதான் தமன்னாவின் நிலையாக இருக்கிறது”. இவ்வாறு கிங் 24/7 youtube சேனலுக்கு பேட்டியளித்துள்ள பயில்வான் ரங்கநாதன் தமன்னாவைப் பற்றி புட்டு புட்டு வைத்துள்ளார்.

author avatar
SATHISH G
சதீஷ் பி.இ. பட்டதாரியான இவர் 3 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 2 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top