Dude: ஓவர் கான்பிடன்ஸ்.. 3வது படத்திலேயே சறுக்கிய பிரதீப் ரங்கநாதன்!.. மண்ட பத்தரம்!…

Published on: December 5, 2025
---Advertisement---

எந்த ஒரு துறையாக இருந்தாலும் வளர்ச்சி என்பது படிப்படியாக இருக்க வேண்டும். அதைவிட முக்கியம் வெற்றி காரணமாக வரும் தலைக்கணத்தை தலையில் ஏற்றிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சிய நம்பிக்கை வந்துவிட்டால் திடீரென கீழே தள்ளிவிடும். இது சினிமாவுக்கு மிகவும் பொருந்தும். இதையெல்லாம் புரிந்துதான் ரஜினி, கமல், அஜித் போன்றவர்கள் எப்போதும் அடக்கமாக பேசுகிறார்கள்.

அதிலும், சினிமாவில் தொடர் வெற்றிகள் கிடைக்கும்போது அடக்கமாக இருக்க வேண்டும். ஓவராக ஆடினால் தோல்வி உடனே பரிசாக கிடைக்கும். தோல்வி என்பதை வசூலோடு மட்டுமே தொடர்புபடுத்தி பார்க்க கூடாது. எல்லா தரப்பு ரசிகர்களையும் கவராமல் போனால் கூட அது தோல்விதான். அதுதான் பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியாகியுள்ள டியூட் திரைப்படம் சந்தித்திருக்கிறது.

dude

20 முதல் 25 வயதுடைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக பிரதீப் ரங்கநாதன் இருக்கிறார். இவர் நடித்து வெளியான லவ் டுடே, டிராகன் ஆகிய இரண்டு படங்களும் இளைஞர்களுக்கு மட்டுமல்ல எல்லாதரப்பு வயதினருக்கும் பிடித்திருந்தது. அப்படிப்பட்ட காட்சிகள் அதில் இருந்தது. ஆனால், டியூட் படத்தை இளைஞர்கள் மட்டுமே கொண்டாடுகிறார்கள்.

30 வயதை தாண்டியவர்களை டியூட் படம் கவரவில்லை. குறிப்பாக 45, 50 வயதை தாண்டியவர்களுக்கு இப்படம் சுத்தமாக பிடிக்கவில்லை. அதற்கு காரணம் பல வருடங்களாக மக்கள் பின்பற்றும், நம்பிக்கை வைத்திருக்கும் சில விஷயங்களை லெப்ட் ஹேண்டில் டீல் செய்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் கீர்த்தீஸ்வரன். புரட்சி, முற்போக்கு என்கிற பெயரில் காதல், பெண்ணுடனான உறவு, பெண்கள் மீதுள்ள மதிப்பீடு, தாலி, திருமண உறவு, கலாச்சாரம் ஆகியவற்றை தவறாக சித்தரித்துள்ளனர்.

அதனால்தான் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது தலையில் அடித்துக்கொண்டு வருகிறார்கள். பைசன், டீசல் இரண்டு படங்களை விடவும் டியூட் படம் அதிக வசூல் செய்திருக்கிறது. படம் வெளியான 4 நாட்களில் 83 கோடி வசூல் செய்திருப்பதாக இப்படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

dude

அதேநேரம் ‘வசூல் மட்டுமே போதுமா?.. படம் எல்லா தரப்பையும் கவர வேண்டாமா?.. ஏற்கனவே சீரழிந்து வரும் இந்தகால இளைஞர்கள் டியூட் படத்தை பார்க்கும் போது கெட்டுப் போய்விட மாட்டார்களா?..  2 படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால் பிரதீப் ரங்கநாதனுக்கு அதீத தன்னபிக்கை.. தான் என்ன செய்தாலும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள், தான் வந்து நின்னாலே படம் ஓடிவிடும் என அவர் நினைக்கிறார்.. டி.ஆர் படத்தில் எல்லோரும் டி.ஆர் ஸ்டைலிலேயே வசனம் பேசுவது போல டியூட் படத்தில் மமிதா பைஜூ, சரத்குமார் ஆகியோர் கூட பிரதீப்பை போலவே பேசுகிறார்கள்.

எங்கோ ஒரு இடத்தில் நடக்கும் ஒரு விஷயத்தை பொதுவான கருத்து போல காட்டுகிறார்கள். ஒரு தப்பான கருத்தை சொல்லி அதை இயல்பான ஒன்று போல சித்தரிக்க முயல்கிறார்கள். இந்த படத்தில் வரும் காட்சிகளை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை’ என்கிறார்கள் சீனியர் சினிமா ரிப்போர்ட்டர்ஸ். ஆனால், அவர்களை ‘பூமர்ஸ்’ என கடந்து செல்கிறார்கள் ஜென் சி என சொல்லப்படும் 2கே கிட்ஸ். இவர்கள்தான் பிரதீப் ரங்கநாதனை கொண்டாடுகிறார்கள்.

லவ் டுடே, டிராகன் அளவுக்கு டியூட் படம் வரவேற்பை பெறவில்லை. எல்லா தரப்பையும் கவரவில்லை என்பதே நிதர்சனம்!..

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment