Diesel Movie Review: சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் திரைப்படம் டீசல். பார்க்கிங், லப்பர் பந்து என வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் ஹரிஷ் கல்யாண் தனக்கென தனிப்பாதையை உருவாக்கியிருக்கிறார்.
அந்த வகையில் அவர் நடிப்பில் தீபாவளி ரேஸில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கும் திரைப்படம் டீசல். வடசென்னை சேர்ந்த இளைஞராக ஹரிஷ் கல்யாண் ஆக்சன் காட்சிகளில் நடித்திருக்கிறார். மற்ற படங்களை ஒப்பிடும்போது டீசலுக்கு சுமாரான விமர்சனங்களே வந்து கொண்டிருக்கிறது. 
லவ்வர் பாய் கேரக்டரில் நடித்து வந்த ஹரிஷ் கல்யாண் திடீரென ஆக்சன் அவதாரம் எடுத்திருப்பது பலருக்கு பெரிய அளவில் திருப்தியை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் அவர் நடிப்பில் வெளிவந்திருக்கும் டீசல் திரைப்படத்திற்கு ட்விட்டர் விமர்சனங்களும் அதையே பிரதிபலித்து வருகிறது. டீசல் திரைப்படத்தில் பாசிட்டிவாக இருந்தது அந்தந்த திரையரங்குகளும், அவர்கள் கொடுத்த இடைவேளை மட்டும்தான் என சிலர் ட்ரோல் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

படத்தின் பிரபலங்கள் தீர்வு சரியாக அமைந்திருந்தாலும் கதை சொல்லிய விதம் பல இடங்களில் சறுக்கலை சந்தித்து இருக்கிறது. ஹரிஷ் கல்யாண் ஆக்சன் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். ஹட் ட்ரிக் வெற்றி எனச் சொல்லப்பட்டாலும் 5க்கு 3.5 மதிப்பெண் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

