Bison: படம் வேற லெவல்!.. கன்பார்ம் ஹிட்!.. பைசன் படத்தின் முதல் விமர்சனம்….

Published on: December 5, 2025
---Advertisement---

Bison Review: சில திரைப்படங்களை இயக்கி இருந்தாலும் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறியிருப்பவர் மாரி செல்வராஜ். அதற்கு காரணம் இவர் எடுத்துக் கொள்ளும் கதைக்களம். தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளை இவரின் படங்கள் பேசி வருகிறது. அவர்கள் எப்படி ஒடுக்கப்பட்டார்கள், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள், அவர்களை இந்த சமுதாயம் எப்படி நடத்துகிறது.. நடத்தியது போன்ற எல்லாவற்றையும் தனது திரைப்படங்களின் வழியாக பேசி வருகிறார் மாரி செல்வராஜ்.

இதை சிலர் வரவேற்றாலும் சாதிய மனப்பான்மை கொண்ட பலராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை ‘எப்போதும் நசுக்கிட்டாங்க.. பிதுக்கிட்டாங்க என்றே படமெடுத்து வருகிறார்’ என மாரி செல்வராஜை விமர்சித்து வருகிறார்கள். பரியேறும் பெருமாள், கர்ணன், வாழை, மாமன்னன் ஆகிய நான்கு படங்களிலும் மாரி செல்வராஜ் பல அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இதில் உதயநிதி நடித்த மாமன்னன் திரைப்படம் நல்ல வசூலை பெற்றது. உதயநிதியின் மகன் இன்பநிதி சினிமாவில் அறிமுகமாகும் படத்தையும் மாரி செல்வராஜே இயக்கப் போகிறார் என்கிற செய்தியும் ஓடி வருகிறது.

bison

ஒருபக்கம் விக்ரமின் மகன் துருவை வைத்து பைசன் என்கிற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். இந்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். தென்மாவட்டத்தை சேர்ந்த மணத்தி கணேசன் என்கிற கபடி வீரரின் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவங்கள் மற்றும் அதோடு கற்பனை கலந்து இப்படத்தை உருவாக்கி இருப்பதாக மாரி செல்வராஜ் சொல்லி இருக்கிறார்.

தீபாவளிக்கு இப்படம் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் UAE நாடுகளுக்கான சென்சாருக்காக இப்படம் சென்றது. அப்படத்தை பார்த்தவர்கள் படம் சிறப்பாக இருப்பதாக பாராட்டி இருக்கிறார்கள். அதே நேரம் இப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 48 நிமிடம் என சொல்லப்படுகிறது. நீளம் அதிகமாக இருந்தாலும் படம் நன்றாக வந்திருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment