Connect with us
lokesh

Cinema News

கமலுடன் நடிக்கும் படத்திற்கு ரஜினி போட்ட கண்டிஷன்!.. அவர் பயம் அவருக்கு!…

Rajni Kamal: தமிழ் சினிமா ரசிகர்கள் பல வருடங்களாகவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது ரஜினியும் கமலும் மீண்டும் எப்போது இணைந்து ஒரு படத்தில் நடிப்பார்கள் என்பதுதான். நடிக்க வந்த புதிதில் இருவருமே பல படங்களில் ஒன்றாக நடித்தனர். ஒருகட்டத்தில் இருவரும் இணைந்து பேசி முடிவெடுத்து தனித்தனி பாதையில் சென்றார்கள். ரஜினி ஆக்சன், ஸ்டைல், மாஸ் என போய்விட கமல் சிறந்த கதைகளிலும். வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்தார்.

இருவரும் இணைந்து நடிக்கவில்லையே தவிர ரஜினிக்கும் கமலுக்கும் இடையே இருக்கும் ஆனால் நட்பு எப்போதும் அப்படியே இருக்கிறது. இருவரும் இணைந்து நடித்து 46 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த 46 வருடங்களில் அவர்கள் இருவரும் பலமுறை பேசியும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு உருவாகவில்லை. இதுபற்றிய கேள்வி இருவரிடமே பலரும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். கமலிடம் இது பற்றி ஊடகம் ஒன்றில் கேட்டதற்கு ‘ரஜினி என்னிடம் இதுபற்றி கேட்டார். இது நடக்க வேண்டும் எனில் ஒன்று நீங்கள் தயாரிப்பாளராக இருங்கள்.. இல்லை நான் தயாரிக்கிறேன்.. இன்னொருவர் வரக்கூடாது என்று சொன்னேன்’ என சொல்லி இருந்தார். தற்போது அது கைகூடி வந்திருக்கிறது.

lokesh
#image_title

தங்கள் இருவரையும் வைத்து படம் இயக்கும்படி ஒரு கதை அமைய வேண்டும். இருவரையும் கையாளும் ஒரு இயக்குனரும் அமைய வேண்டும் என்பதற்காகவே இருவரும் பல வருடங்கள் காத்திருந்தனர். இப்போது லோகேஷ் கனகராஜ் வந்துவிட்டார் தன்னுடைய எல்லா படங்களிலும் இரண்டு மூன்று நடிகர்களை வைத்து அவர் படங்களை உருவாக்கி ஹிட் கொடுக்கிறார். சமீபத்தில் வெளியான கூலி படம் நெகடிவ் விமர்சனங்களை பெற்றாலும் இதுவரை 400 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது.

மேலும் கமலை வைத்து விக்ரம் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த லோகேஷ் ரஜினிக்கு கூலியை கொடுத்திருக்கிறார். எனவே இதுதான் சரியான நேரம் என யோசித்த கமலும் ரஜினியும் லோகேஷிடம் பேசி ஒரு கதையை உருவாக்க சொல்லி இருக்கிறார்களாம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது. அந்த நிறுவனத்தோடு உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படத்தின் பட்ஜெட் 700 கோடி வரை இருக்கும் என்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் அடுத்து கைதி 2 படத்தைத்தான் இயக்கவிருந்தார். ஆனால் சில காரணங்களால் அது தள்ளிப் போகும் என சொல்லப்படுகிறது. அதோடு கார்த்தியிடம் கமலும் இதுபற்றி பேச அவரும் சம்மதித்து விட்டாராம். எனவே லோகேஷ் அடுத்து இயக்கும் படம் ரஜினி கமல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ‘இப்போது நான் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறேன். எனவே ரசிகர்களின் கவனம் இதில்தான் இருக்க வேண்டும். எனவே இப்போது இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவிக்க வேண்டாம் என ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திடம் ரஜினி சொல்ல கமலிம் அதை ஏற்றுக் கொண்டாராம்.
ஜெயிலர் 2 படம் ரிலீஸ் ஆன பின்பு இது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

More in Cinema News

To Top