Connect with us
surya vijay

Cinema News

இனிமே இப்படித்தான்!.. விஜய் ரூட்டில் போகும் சூர்யா!.. என்ன பிளான்னு தெரியலயே!..

Surya 46: கோலிவுட்டில் இருக்கும் முன்னடி நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். ஆரம்பத்தில் தடுமாறினாலும் காக்க காக்க, பிதாமகன், சிங்கம், அயன் போன்ற படங்களில் நடித்து தன்னை மெருகேற்றிக் கொண்டு முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இவர்களுக்கு தேவ், தியா என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

கடந்த சில வருடங்களாகவே சூர்யாவிற்கு சூப்பர் ஹிட் படங்கள் அமையவில்லை அவரை நடிப்பில் உருவாகி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கங்குவா திரைப்படமும் தோல்வியடைந்தது. கார்த்தி சுப்பாராஜ் இயக்கத்தில் நடித்த ரெட்ரோ திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது.

அதன்பின் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்கிற திரைப்படத்தில் நடித்தார். இந்த படமும் பல சிக்கல்களை சந்தித்து 90 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து நிலையில் அப்படியே நிற்கிறது. வருகிற தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட திட்டமிட்டனர். ஆனால் பல சிக்கல்களால் அடுத்த வருடம்தான் இப்படம் வெளியாகும் என சொல்கிறார்கள்.

தற்போது சூர்யா தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு மாதத்தில் 20 நாட்கள் மட்டுமே திரைப்படங்களில் நடிப்பது. மீதி 10 நாட்கள் குடும்பத்திற்காக என ஒதுக்க திட்டமிட்டு இருக்கிறாராம் சூர்யா. நடிகர்களில் இதை ஏற்கனவே விஜய் பின்பற்றினார். தற்போது அது சூர்யாவும் பின்பற்றவிருக்கிறார்.

Continue Reading

More in Cinema News

To Top