Dude: அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதிப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்து இன்று காலை வெளியாகியிருக்கும் திரைப்படம் Dude. கோமாளி படத்தில் இயக்குனராக அறிமுகமாகி, லவ் டுடே, டிராகன் ஆகிய இரண்டு படங்களிலும் ஹீரோவாக நடித்து ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள மூன்றாவது திரைப்படம் டியூட்.
ஒரு ஜாலியான, கலகலப்பான, குடும்ப செண்டிமெண்ட் மற்றும் காதல், காமெடி கலந்த திரைப்படமாக டியூட் உருவாகி இருப்பதாக புரமோஷன் செய்தார்கள். தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதியான இன்று காலை 9 மணிக்கு தமிழ்நாட்டில் இப்படம் வெளியானது. அதே நேரம் ஆந்திராவிலும், ஓவர்சீஸ் என சொல்லப்படும் வெளிநாடுகளிலும் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6:00 மணிக்கு டியூட் படம் திரையிடப்பட்டது. அப்படி படம் பார்த்த சிலர் படம் எப்படி இருக்கிறது என்பதை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.
‘Dude வின்னர்.. கீர்த்தீஸ்வரன் படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார். ஒரு சரியான Gen Z ரொமான்டிக் காமெடி திரைப்படம். பிரதீப்பும், மமிதா பைஜூவும் இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்தி இருக்கிறார்கள். சமுதாயத்திற்கு தேவையான ஒரு நல்ல கருத்து கொண்ட பொழுதுபோக்கு படம்’ என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.
இன்னொருவரோ ‘மம்தா பைஜு, பிரதீப் ரங்கநாதன் காம்போ நைஸ்.. சரத்குமார் சிறப்பாக நடித்திருக்கிறார்.. இசை ஓகே.. படம் மெதுவாக செல்கிறது. இடைவேளை காட்சியின் போது வரும் 20 நிமிடம் நன்றாக இருக்கிறது. படத்தின் இறுதி காட்சியில் நடிப்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். படத்தில் குறைவான எமோஷனல் காட்சிகள் வருகிறது. அது சரியாக கனெக்ட் ஆகவில்லை. அதே நேரம் படத்தை காமெடி காட்சிகள் காப்பாற்றுகிறது. ஒருமுறை பார்க்கலாம்’ என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.
இன்னொருவரோ ‘ஓவர்சீஸில் Dude படுத்துவதற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வருகிறது. அதுவும் பிலோ ஆவரேஜ் என பலரும் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் அப்படித்தான் என நினைக்கிறேன். பிரதீப் ரங்கநாதன் இதுக்கு மேல கொஞ்சம் அடங்குவார் என நம்புகிறேன்‘ என நக்கலாக பதிவிட்டிருக்கிறார்.
தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சி என்பதால் காலை 11:30 மணிக்கு மேல் படம் எப்படி இருக்கிறது என்கிற முழு விவரம் தெரிந்துவிடும்.
