
Cinema News
அவர பத்தி பேசுனா பிஞ்சிடும்.. ப்ளூ சட்டை மாறனை விரட்டி அடிக்கும் ஆதவன்..
தமிழ் சினிமா தற்பொழுது அதள பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் ஒரு படம் வெளியாகும் அன்று படம் நன்றாக இருந்தாலும் அதற்கு நெகட்டிவ் ரிவ்யூ கொடுத்து அந்தப் படத்தை ஓட விடாமல் செய்து விடுகிறார்கள் என்று பிரபல சினிமா நடிகர், டிவி தொகுப்பாளர், விமர்சகருமான ஆதவன் கூறியுள்ளார். மற்ற மாநில திரைப்படங்கள் பான் இந்தியா தரத்தில் படம் எடுத்து அடுத்த கட்டத்துக்கு முன்னேறி செல்கிறார்கள்.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரை தெலுங்கு சினி உலகம் ஆயிரம் கோடி வசூலை அசால்டாக அள்ளி வருகிறது. அதேபோல கன்னட திரை உலகமும் கேஜிஎப், காந்தாரா போன்ற படங்களின் மூலம் ஆயிரம் கோடி வசூலை அள்ளி வருகிறது. இத்தனை வருடங்கள் ஆகியும் தமிழில் இன்னும் ஒரு படம் கூட ஆயிரம் கோடி வசூலை எட்ட முடியவில்லை. இதற்கு காரணம் தமிழர்களே தமிழ் சினிமாவை ஆதரிக்க மறுக்கிறார்கள்.

அவர்களை திசைமாற்றும் வேலை செய்பவர்கள், இந்த ரிவியூவர்கள் தான் என்று சினிமா பிரபலங்களின் கருத்தாக உள்ளது. தற்போது வெளியான கூலி திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் படம் வெளியான அன்று முதலே நெகட்டிவ் விமர்சனங்களை பரப்ப தொடங்கி விட்டனர். குறிப்பாக ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம் வழக்கம் போல கூலி படத்தை நார்னாராக கிழித்து தொங்க விட்டார்.
அதற்கு ஆதவன் எதிர்ப்பு தெரிவித்து ப்ளூ சட்டை மாறனை பங்கமாக கலாய்த்துருப்பார். அதோடு விடாமல் தற்போது ப்ளூ சட்டை மாறனை,” யோவ் நாமெல்லாம் ரொம்ப சாதாரண மான ஆளுங்கயா. அவர நாமெல்லாம் எதுவும் சொல்றது இல்ல, அவரை தெலுங்கு கத்துக்கிட்டு தெலுங்குல ஒரு விமர்சனம் கொடுக்க சொல்லுங்களேன் பார்க்கலாம். கொடுத்துட்டு எப்படி திரும்பி வரார்னு பார்க்கிறேன். தெலுங்குல இப்படி கொடுத்தா கும்முன்னு ஒன்னு கொடுப்பாங்க, பாலையா பத்தி ரெண்டு வார்த்தை தப்பா பேசினா பிஞ்சிடும்”.
”ஏன்னா அவங்க எல்லாம் ஒவ்வொரு சினிமாவையும் மதிப்பாங்க”. என்று ப்ளூ சட்டை மாறனுக்கு ஆதவன் சவால் விட்டுள்ளார். தமிழ் சினிமாவை இந்த கிழி கிழிக்கிறியே உனக்கு தில் இருந்தா ஆந்திரா அல்லது தெலுங்கானா பக்கம் போய் ஒரு தெலுங்கு நடிகரை பத்தி தப்பா பேசினா என்ன நடக்கும்னு அவங்க உனக்கு காட்டுவாங்க என்று கூறியுள்ளார் ஆதவன். இங்கே சினிமாவை மதிக்காமல் போனால் தான் நல்ல படங்கள் கூட சுமாரான வெற்றியைக் கூட பெற முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது என்பது பல சினிமா பிரபலங்களில் கருத்தாகவும் உள்ளது.