அனல் பறக்கும் ஆக்‌ஷன்!.. பீனிக்ஸ் படம் எப்படி இருக்கு?!. டிவிட்டர் விமர்சனம்…..

Published on: December 1, 2025
vijay sethupathi son
---Advertisement---

Phoenix movie: விஜய் சேதுபதியின் மகன் சூர்யா பீனிக்ஸ் வீழான் திரைப்படம் மூலம் சினிமாவில் நடிகராக மாறியிருக்கிறார். குண்டான தோற்றத்தை கொண்டிருந்த இவர் இந்த படத்தில் நடிப்பதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து ஆளே மாறியிருக்கிறார். இந்த படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் சினிமா பிரபலங்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு ஒரு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

அப்போது படம் பார்த்த பலரும் படம் எப்படி இருக்கிறது என்பதை டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். ஆக்‌ஷனோடு நல்ல கதையும் இருக்கிறது. படத்தின் திரைக்கதை சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சூர்யா சேதுபதியின் நடிப்பு அசத்தலாக இருக்கிறது. அனல் அரசு மாஸ்டர் படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார் என ஒருவர் பதிவிட்டிருக்கிறார். சூர்யா சேதுபதி தனது ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் முழுப்படத்தையும் தோளில் சுமந்திருக்கிறார் என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

ரெமோ மற்றும் சுல்தான் ஆகிய படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘பீனிக்ஸ் விழான்.. தலைப்புக்கு ஏற்றது போல படம் வீறு கொண்டு எழுந்து கொண்டே போகிறது. அனல் அரசு சண்டைக் காட்சிகள் தெறிக்கவிட்டிருக்கிறார். அதேநேரம், செண்டிமெண்ட் காட்சிகளையும் சரியாக அமைத்திருக்கிறார். தம்பி சூர்யா சேதுபதி ஆக்‌ஷன் காட்சிகளில் நாக்அவுட் நடிப்பை கொடுத்திருக்கிறார். இந்த படம் அவருக்கு ஒரு நல்ல தொடக்கம்’ என பாராட்டியிருக்கிறார்.

இந்த படத்தில் நிறைய குளோஸ் அப் காட்சிகளை வைத்திருக்கிறார்கள். குளோஸப் ஷாட்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்துவது மிகவும் கடினம். ஆனால், சூர்யா சேதுபதி அதை கச்சிதமாக செய்து அசத்தியிருக்கிறார் என ஒருவர் பாராட்டியிருக்கிறார். முதல் பாதியில் அதிகம் பேசாத சூர்யா சேதுபதி இரண்டாம் பாதியில் ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் அசர வைத்திருக்கிறார்.

இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், தேவதர்ஷினி, அபி நக்‌ஷத்ரா, சம்பத் ராஜ், ஹரிஸ் உத்தமன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். பீனிக்ஸ் வீழான் திரைப்படம் ஜூலை 4ம் தேதியான நாளை வெளியாகிறது. இந்த படத்தோடு ராமின் பறந்து போ மற்றும் சரத்குமார் சித்தார்த், தேவயாணி ஆகியோர் நடித்துள்ள 3BHK ஆகிய படங்களும் வெளியாகவுள்ளது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment