
Cinema News
38 ஆண்டுகளாக நடந்த ரஜினி – சத்யராஜ் சண்டை!.. புட்டு புட்டு வைக்கும் புரடியூசர்
38 ஆண்டுகளாக எதிரும் புதிருமாக இருந்த ரஜினி மற்றும் சத்யராஜ் கூலி படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ரஜினி மற்றும் சத்யராஜ் இடையேயான மோதல் குறித்து பகிர்ந்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு மேலும் அவர் கூறியதாவது,” 1982 ஆம் வருடம் ”தீர்ப்புகள் திருத்தப்படலாம்” என்ற படத்தை என்னுடைய அப்பா தயாரித்து இயக்குகிறார். அந்த படத்தில் சிவக்குமார், அம்பிகா நடிக்கின்றனர் அதில் வில்லன் கதாபாத்திரம் தேவைப்பட்டது”.
”அதற்காக யாரை போடலாம் என்று தேடிக் கொண்டிருக்கும் பொழுது சிவகுமார் சார் என் சொந்தக்கார பையன் ஒருவன் இருக்கிறான் என்று சத்யராஜை அறிமுகப்படுத்துகிறார். என்னுடைய அப்பா சத்யராஜ் உயரம் அதிகமாக இருப்பதால் அவர் இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று நிராகரிக்கிறார். சிவகுமார் சார் ரொம்ப கெஞ்சி கேட்டதால் சத்யராஜ் அந்த படத்தில் நடிக்க வைத்தோம். படம் பிளாக்பஸ்டர் ஹிட் 100 நாட்கள் ஓடியது. அதன் பிறகு தொடர்ந்து சத்யராஜுக்கு படங்கள் குவிய தொடங்கியது. அதன் பிறகு ஹீரோவாக மாறுகிறார்”.
அந்த நேரத்தில் ”ஜல்லிக்கட்டு” என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அதில் சத்யராஜ், சிவாஜி சாரும் இணைந்து நடிக்கிறார்கள், மணிவண்ணன் இயக்குகிறார். அந்த சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று சத்யராஜை நானும் அப்பாவும் பார்க்க செல்கிறோம். நாங்கள் பார்த்த சத்யராஜாக அன்று அவர் இல்லை. அவர் எங்களிடம் அடுத்த மூன்று வருடத்திற்கு தேதியில்லை. சம்பளம் 3 கோடி வாங்கினேன் என்று சொன்னார். அப்படியே அமாவாசையாக மாறிய சத்யராஜை நாங்கள் பார்த்தோம்.

அதன் பிறகு ”ஒன்பது ரூபாய் நோட்டு” படத்திற்காக தங்கர்பச்சான் எங்களிடம் அணுகினார். இதில் சத்யராஜ் தான் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் அதற்கு அப்பா மறுத்தார். உடனே தங்கர் பச்சான் சத்யராஜ் வீட்டிற்கு சென்று எடுத்துக் கூறி அவரை அப்பாவிடம் பேசவைத்து அப்பாவை சமாதானப்படுத்தி அந்த படத்தை எடுத்தார்கள். இதுதான் சத்யராஜின் உண்மையான கேரக்டர்.
”சத்யராஜ் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் சத்யராஜ் மனசுக்குள் என்ன இருந்துச்சு என்று நம்மால் சொல்ல முடியாது. ஆனால் ரஜினி மீது ஏதோ ஒரு கோபம் இருந்தது என்பதை எந்த விதத்திலும் மறுக்க முடியாது. அதேபோல எந்த மேடை கிடைத்தாலும் சத்யராஜ் ரஜினியை தரம் தாழ்த்தி பேசுவார். அவரின் கோபத்தை கிடைக்கும் மேடைகளில் பயன்படுத்தி அப்படி பேச ஆரம்பித்தார். காவேரி பிரச்சனை போது பெரிய மேடையில் சினிமா திரையுலகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது”.
”அந்த மேடையில் முக்கியமான நடிகர்கள் எல்லோரும் இருக்கிறார்கள். அதில் சத்யராஜ் ரஜினியை தாக்கி பேசினார். இந்த மேடையில் நான் கைதட்டு வாங்க வேண்டும் என்றால் யார் பெயரை சொல்லி வாங்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அப்படி நான் வாங்குவதற்கு நாக்க புடுங்கிட்டு சாகலாம் என்று சொன்னார். பொதுவாக ரஜினி மிகவும் பக்குவப்பட்ட மனிதர் அவர் எந்த காலத்திலும் கண்ணியத்தோடு நடந்து கொள்வார். ஆனால் சத்யராஜ் கிடைக்கும் மேடைகளில் ரஜினியை அவமானப்படுத்தி பேசுவார்”.

”நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவாஜி பட வாய்ப்பு சத்யராஜுக்கு வருகிறது. அப்போ சத்யராஜ் சங்கரிடம் நான் இந்த படத்தில் வில்லனாக நடித்தால் நான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ரஜினி வில்லனாக நடிப்பாரா என்று கேட்டுள்ளார். இதை கேட்ட ஷங்கர் வாய் அடைத்து போய் உள்ளார். சமீபத்தில் கூலி மேடையில் கூட ரஜினி எனக்கு நிகராக சம்பளம் பேசப்பட்டும் சிவாஜி படத்தில் அவர் நடிக்க மறுத்துவிட்டார் என்று நாகரிகமாக பேசி இருப்பார். முதலில் சத்யராஜ் கூலி படத்தில் எதற்கு நடித்தார் என்று எனக்கு புரியவில்லை”.
”சிவாஜி படத்தில் அவ்வளவு பெரிய வில்லன் அவ்ளோ பெரிய சம்பளம் கொடுத்தே வேண்டாம் என்று சொன்ன சத்யராஜ், இன்று கூலி படத்தில் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் செய்ய வேண்டிய கேரக்டரை இவர் செய்திருக்கிறார். அந்த கேரக்டரில் ஒன்றுமில்லை. ரஜினி படம், சன் பிக்சர்ஸ், லோகேஷ் கனகராஜ் இவர்கள் படங்களில் நடித்தால் தனக்கு ஒரு பேர் கிடைக்கும் என்பதற்காக தான் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்று எனக்கு தோன்றுகிறது”.
”தெலுங்கு பிரமோஷனில் சென்று ”மோனிகா” பாடலில் டான்ஸ் ஆடுகிறார். 74 வயதில் ரஜினி டான்ஸ் ஆடுகிறார் என்ற சொன்ன வாய், இப்போ உங்களுக்கும் 74 வயது தான் ஆகிறது நீங்க என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்கன்னு தெரியுதா ? உங்க கேரக்டரை சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி மாத்திப்பீங்க இதுதான் சத்யராஜ்”. என்று கூறியுள்ளார்.