
Cinema News
Suriya: ஹிட் கொடுத்தாலும் சூர்யாவுடன் மீண்டும் இணையாததற்கு காரணம்! ஏஆர் முருகதாஸ் பளீச்
Suriya: தமிழ் சினிமாவில் ஒரு உன்னதமான நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் வெங்கி அட்லூரி படத்திலும் நடித்து வருகிறார். அவரிடன் நடிப்பில் வெளியான கங்குவா மற்றும் ரெட்ரோ போன்ற திரைப்படங்கள் அவருக்கு தோல்வியை தேடி தந்தது. இது சூர்யாவின் மார்கெட்டை சீர் குலைக்கவும் காரணமாக இருந்தது.
இதனால் தொடர்ந்து ரசிகர்கள் சூர்யாவை கிண்டல் செய்து வந்தனர். ஆனாலும் அதை பற்றியெல்லாம் சூர்யா பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதனால் அடுத்து கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலையில்தான் இருக்கிறார் சூர்யா. இதற்கிடையில் சமீபகாலமாக ஏஆர் முருகதாஸ் பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகின்றன.
அதில் சூர்யாவை வைத்து ஏன் மறுபடியும் தான் படம் எடுக்கவில்லை என்ற காரணத்தை கூறியிருக்கிறார். கஜினி மற்றும் ஏழாம் அறிவு போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் ஏஆர் முருகதாஸ். அதன் பிறகு சூர்யாவை வைத்து அவர் படமே எடுக்கவில்லை. இருவருக்கும் இடையே பெரியதாக கருத்து வேறுபாடு இல்லை என்றாலும் ஊடகங்கள் இவர்களுக்கிடையே சில மனக்கசப்பு இருப்பதாக எழுதி வந்தார்கள்.
ஆனால் அதை பற்றி இருவருமே வாய் திறக்க வில்லை. இன்று வரை இருவரும் நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள். சமீபத்தில் கூட இதை பற்றி முருகதாஸ் கூறும் போது எங்களுக்குள் மனக்கசப்பு என்று எதுவும் இல்லை. ஒரு கட்டத்திற்கு மேல் வேறு வேறு மாதிரி பண்ணலாம் என்ற எண்ணம் வந்திருக்கலாம். ஏழாம் அறிவு ப்ராஸசிங்கில் இருக்கும் போதே துப்பாக்கி பண்ண ஆரம்பிச்சிட்டேன்.
துப்பாக்கிக்கு பிறகு வேறு மாதிரி போயிடுச்சு. மீண்டும் வந்து அவருடன் இணையலாம். தனிப்பட்ட வெறுப்பு அப்படினு எதுவும் கிடையாது. அற்புதமான மனிதர். நல்ல உழைப்பாளி. ஆனால் ஒரு ப்ராஜக்ட்டுனு வரும் போது எல்லாருக்குமே ஒரே மாதிரியான எண்ணம் வரணும். இன்னும் சொல்லப்போனால் அவங்க குடும்பத்துலயே எனக்கு நெருக்கமான நட்பு என்றால் சிவக்குமார் சார்தான் என முருகதாஸ் கூறியிருக்கிறார்.