
latest news
விஜயகாந்த் – வடிவேலு மோதல்!.. அன்று இரவு என்ன நடந்தது?.. சீக்ரெட் சொன்ன பிரபலம்
Published on
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். சமகாலங்களில் ரஜினி, கமல் என இருபெரும் இமயங்கள் தமிழ் சினிமாவை ஆண்டு கொண்டிருந்த காலத்தில் அவர்களுக்கு இணையான இடத்தைப் பிடித்தவர் விஜயகாந்த். இவரின் படங்களில் சண்டைகளுக்கு பஞ்சம் இருக்காது. அதிரடி காட்சிகளில் நடிப்பது இவருக்கு அல்வா சாப்பிடுவது போல. எந்தவித டூப் போடாமல் ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளில் அசால்டாக நடிப்பார்.
அதுமட்டுமின்றி மற்றவருக்கு உதவி என்று வரும்போது அது என்னவாக இருந்தாலும் ஓடி வந்து முன் நின்று அதை செய்து கொடுக்கும் மாமனிதன். அப்படிப்பட்ட மாமனிதன் தான் திரைப்பட கல்லூரி மாணவர்களை வளர்த்து விட்டார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அது மட்டுமின்றி தன்னுடன் நெருங்கி பழகுபவர்களை தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொடுத்து அவர்களை தூக்கி விடுவார். அப்படி சின்ன கவுண்டர் படத்தில் வடிவேலுவை ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுத்து அவரை வளர்த்து விட்டார்.
அதுவரை கவுண்டமணி உடன் பின்னாடி நின்று துணை கதாபாத்திரமாக நடித்துக் கொண்டிருந்த வடிவேலுவை சின்ன கவுண்டர் படத்தில் சோலோ பர்பாமன்ஸ் செய்ய வைத்து அழகு பார்த்தவர் விஜயகாந்த். அதன் பின் வடிவேலு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத உச்சம் தொட்ட காமெடி நடிகராக உருவாகினார். விஜயகாந்த் உடன் பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வடிவேலு கலக்கி இருப்பார். அதிலும் ”எங்கள் அண்ணா” படத்தில் இவர் செய்த அலப்பறை இன்றும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
ஒரு காலகட்டத்தில் பெரிய நடிகராக வளர்ந்த வடிவேலு விஜயகாந்தின் வீட்டின் அருகிலேயே குடியேறினார். திடீரென்று ஒரு நாள் விஜயகாந்திற்க்கும் வடிவேலுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் வடிவேலு பல விமர்சனங்களுக்கு ஆளானார். அன்று இரவு என்ன நடந்தது? என்று பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான லியாகத் அலிகான் கூறியிருக்கிறார் அதில்,” வார்த்தைகள் தப்பானால் சண்டைகள் பெரிதாகிவிடும். விஜயகாந்த் வீடும் வடிவேலுவின் வீடும் அருகருகே இருந்தது. விஜயகாந்தின் சகோதரி வீடும் அருகில் இருந்தது. அங்கு ஒரு துக்க நிகழ்வு. உடனே அதற்காக கூட்டம் கூடியது”.
”அவர்கள் வந்த வாகனம் அனைத்தும் வடிவேலுவின் அலுவலகம் வரை நின்று கொண்டிருந்தது. அன்று இரவு வந்த வடிவேலு நின்று கொண்டிருந்த கார்களை பார்த்து இது யாருடைய கார்? எவண்டா நிப்பாட்டியது? அப்படி இப்படின்னு சத்தம் போட்டு இருக்கிறார். அருகிலிருந்த கட்சிக்காரர்களும் தாறுமாறாக பேசி விட்டனர். அது தகராறாக மாறிவிட்டது, கட்சிக்காரர்கள் வடிவேலுவை அடிக்க சென்று விட்டார்கள். அதனால் வடிவேலும் போலீசுக்கு சென்று விட்டார். அப்பொழுது திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி இருந்ததால் அவர்கள் பாதுகாப்பில் வடிவேலு இருந்தார்”.
”இது கட்சிக்காரர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இது ஒரு துக்க வீடு இங்கே வந்து வடிவேல் அப்படி பேசலாமா? என அவர்களுக்குள் ஒரு கோபம் உண்டானது. அதன் பிறகு வந்த தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக விஜயகாந்த் தப்புத் தப்பாக பேசி அவமானப்படுத்தினார். வடிவேலு வளர்வதற்கு விஜயகாந்த்தும் ஒரு காரணம்தான். வளர்த்து விட்ட வரை இப்படி ஊர் ஊராக சென்று தப்பு தப்பாக பேசியதால் இந்த கட்சிக்காரர்கள் எல்லாம் ரொம்ப கோவப்பட ஆரம்பிச்சுட்டாங்க”.
”அதற்கான பலன் அந்த தேர்தலில் திமுக ஜெயிக்கவில்லை. தோற்ற உடன் வடிவேல் மீது வெறி அதிகமாகிவிட்டது. வடிவேலு ஒரு திறமையான கலைஞன். ஆனா என்ன பொறுத்த வரைக்கும் நாசமா போய்ட்டான். இன்னும் பல உண்மைகள் இருக்கு அதை நான் வெளியில் சொன்னால் எனக்கு தர்மமாக இருக்காது. அதை இறைவன் பார்த்துக் கொள்வான்”. என்று கூறி இருக்கிறார்.
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே...
Goundamani: கோவையை சேர்ந்த சுப்பிரமணியன் கருப்பையா நாடகங்களில் நடித்து வந்தார். எப்படியாவது சினிமாவில் சேர்ந்து நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். கருப்பு...
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்களை சந்திப்பதற்காக கரூருக்கு சென்றிருந்தபோது அங்கு நடந்த அசம்பாவிதமான சம்பவம் அவரை...